பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அறிவழகன். இவர் தனது குருநாதரின் தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களை வரிசையாக எடுத்தால் அதில் நிச்சயம் ஈரம் திரைப்படம் முதல் 10 இடங்களில் இடம்பெறும் என்று உறுதியாக கூறலாம்.
அந்த அளவிற்கு, பக்குவமாகவும், அசத்தலான திரைக்கதையுடனும் ஈரம் திரைப்படத்தை ரசிகர்களுக்கு விருந்தளித்து இருப்பார் அறிவழகன். எந்த காட்சியும் ரசிகர்களை பயமுறுத்தாமல், இருக்கையில் நுணுக்கி அழைத்துச் சென்று தான் சொல்ல வந்ததை தெளிவாக விளக்கி இருப்பார் அந்த இயக்குனர்.
இதன் காரணமாக ரசிகர்கள் ஈரம் திரைப்படத்தை கொண்டாடினர். அதன் மேக்கிங்கும் சிறப்பாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வல்லினம் என்னும் திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நன்றாக இருந்தாலும் அந்த நேரத்தில் பெரிதாக ஓடவில்லை. பிறகு அருண் விஜயை வைத்து குற்றம் 23 என்னும் திரைப்படத்தை அவர் எடுக்க அது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த திரைப்படம் உதவியது.
இதில் பிறகு அருள் நிதியை வைத்து ஆறாவது சினம் என்னும் திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார். இந்தத் திரைப்படம் முன் விமர்சன ரீதியாக அறிவழகனுக்கு நல்ல பெயரையே பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அருண் விஜயை வைத்து அவர் தமிழ் ராக்கர்ஸ் என்னும் படத்தை எடுக்க அது சரியாக போகவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஈரம் பட நாயகன் ஆதியுடன் அவர் கைகோர்த்து இருக்கிறார்.
இதுவும் ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதில் ஆதியுடன் லட்சுமிமேனன் சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சப்தம் என இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் முடிந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசர் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒவ்வொரு காட்சிகளும் பரபரப்பாக வைக்கப்பட்டுள்ளன. டீசரை பார்த்து விட்டு நிச்சயம் இந்த திரைப்படம் இயக்குனருக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.





