- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் மலையாள நடிகையை தாக்கினாரா டைரக்டர் பாலா? - படத்தை விட்டு நடிகை விலகிய...

ஷூட்டிங் ஸ்பாட்டில் மலையாள நடிகையை தாக்கினாரா டைரக்டர் பாலா? – படத்தை விட்டு நடிகை விலகிய தகவலால், கோலிவுட்டில் பரபரப்பு

- Advertisement -

இயக்குநர் பாலா, தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் முக்கிய இயக்குநராக இருக்கிறார். ஒரு சிறந்த படைப்பாளியாக தமிழ் சினிமாவுக்கு நல்ல படங்களை இதுவரை தந்திருக்கிறார். அவரது படங்கள் எல்லாமே, தனித்தன்மை வாய்ந்ததாக, ஏதோ ஒரு முக்கிய பொருளை பேசுவதாகவே அமைந்திருக்கின்றன.

அதேபோல் டைரக்டர் பாலா படத்தில் நடித்த நடிகர்கள், விரைவில் தமிழில் மிக முக்கியமான நடிகர்களாக மாறி விடுகின்றனர். ரசிகர்களின் அதிக கவனம் ஈர்த்த நடிகர்களாக, அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர். அப்படிதான் சேது படத்தில் நடித்த சியான் விக்ரம், நந்தா படத்தில் சூர்யா, தங்களுக்கான முக்கியத்துவத்தை அடைந்தனர்.

- Advertisement -

தாரை தப்பட்டை, பரதேசி, அவன் இவன், நான் கடவுள், பிதாமகன் என பல படங்கள் இயக்குநர் பாலாவின் பெயர் சொல்லும் படங்களாக இருக்கின்றன. இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாலா, முதன் முறையாக இயக்கிய படம்தான் சேது. அந்த படம்தான் சியான் விக்ரமுக்கு, திருப்பு முனையாக சினிமா பயணத்தில் அமைந்ததும் கவனிக்கத்தக்கது.

இப்போது டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் முதலில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சூர்யா. ஆனால் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா, சூர்யாவை டார்ச்சர் செய்ததால் அவர் படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. பிறகு சூர்யா நடித்த கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

- Advertisement -

டைரக்டர் பாலா, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர், நடிகைகளை தன் படத்தில் பணிசெய்யும் ஊழியர்களாக மட்டுமே பார்ப்பார். ஹீரோ, ஹீரோயின் என யாருக்குமே அந்த அளவில்தான் நடந்துக்கொள்வார். இந்த நிலையில் வணங்கான் படத்தில் நடித்த 22 வயதான மலையாள நடிகை மமிதா பைஜூ என்பவரை டைரக்டர் பாலா தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் நடிகை மமிதா பைஜூ கூறியதாவது, வணங்கான் ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் நான் நடித்த போது 3 முறை டேக் ஆகி விட்டது. எனக்கு சரியாக அந்த காட்சி புரியவில்லை. அப்போது, டைரக்டர் பாலா என் தோள்பட்டையில் அடித்தார், என்று கூறியுள்ளார். இதையடுத்து வணங்கான் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்