- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் படம் குறித்த முக்கிய தகவலை சொன்ன இயக்குனர் பாலா, அந்த முயற்சிதான் இந்த படம்...

வணங்கான் படம் குறித்த முக்கிய தகவலை சொன்ன இயக்குனர் பாலா, அந்த முயற்சிதான் இந்த படம் என்றும் வெளிப்படையாக சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனித்தக்க படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சேது படம் மூலம் இயக்குனராக மாறியவர். 25 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்துள்ள இயக்குனர் பாலா இதுவரை இயக்கிய படங்களின் எண்ணிக்கை 10 கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமர்ஷியலாகவும், கதை பண்ண வேண்டும் என்பதற்காகவும் படங்களை எடுத்து தள்ளும் இயல்பு இல்லாதவர் பாலா. ஒவ்வொரு படத்துக்கும் நீண்ட கால இடைவெளி விடுகிறார். கடந்த 2016ம் ஆண்டில் பாலா இயக்கத்தில் சசிக்குமார் வரலட்சுமி சரத்குமார் நடித்த தாரை தப்பட்டை படம் வெளியானது. இது இளையராஜா இசையமைத்த 1000வது படமாகவும் சிறப்பு பெற்றது.

- Advertisement -

தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து பாலா இயக்கத்தில் வெளியான படம்தான் வணங்கான். முதலில் சூர்யா நடித்து ஒரு மாதமான நிலையில் அவர் படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு இந்த கதையில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

வாய் பேசாத ஹீரோ அருண் விஜய், பார்வையற்றோர் ஆசிரமத்தில் வாட்ச்மேனாக இருப்பார். அங்கு பார்வையற்ற பெண்கள் குளியலறையில் குளிப்பதை 3 பேர் பார்ப்பதை தெரிந்துக்கொண்ட அவர்களை கொடூரமாக தண்டிப்பதே படத்தின் கதை. இந்த படம் குறித்த ஒரு உண்மையை சமீபத்தில் இயக்குனர் பாலா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

- Advertisement -

வணங்கான் படம் குறித்து பேசிய இயக்குனர் பாலா, ஒரு நேர்காணலில் கூறியதாவது, வணங்கான் படத்தில் வரக்கூடிய அந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவம்தான். அதுவும் சென்னையில்தான். ஆனால் அந்த ஸ்கூல் பெயரை நான் சொல்ல முடியாது. ஒரு பார்வையற்றோர் பள்ளியில்தான் அப்படி நடந்திருக்கிறது.

பேசிப் பேசியே தான் வசனத்தில் சொல்லி சொல்லியே தான் கதையை புரிய வைக்க வேண்டும் என்ற நிலையில் சினிமா உள்ள இந்த காலத்தில், பேசாமலும் புரிய வைக்கலாம் என்று எடுத்துக்கிட்ட ஒரு முயற்சிதான் வணங்கான் படம், என்று இயக்குனர் பாலா அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகன் அருண் விஜய் வாய் பேசாத காது கேளாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், அவரது நடிப்பின் வாயிலாக தனது மனநிலை குறித்து தெளிவாக ரசிகர்களுக்கு பாலா புரிய வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்