- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் குறித்து வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர் பாரதிராஜா - இப்படி சொல்லிட்டாரே?

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் குறித்து வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர் பாரதிராஜா – இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. யதார்த்த மக்களின் வாழ்க்கையை செம்மண் புழுதி பறக்கும் காடுகளில் படமாக்கி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர். இன்றும் முதல் மரியாதை படம், தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது.

முன்னணி ஹீரோ கமலை, 16 வயதினிலே படத்தில் கோவணம் கட்டிய சப்பாணியாக நடிக்க வைத்தார். ரஜினியை பரட்டையன் கேரக்டரில் நடிக்க வைத்து, தமிழ் சினிமாவில் அவரது வெற்றிப் பயணத்தை துவங்கி வைத்தார். பாரதிராஜாவின் ஒரு படத்தை பார்த்தால், 100 படங்களில் பணிபுரிந்த ஒரு அனுபவத்தை உதவி இயக்குனர்கள் பெற்றுவிட முடியும்.

- Advertisement -

முதுமை காரணமாக இப்போது பாரதிராஜா படங்களை இயக்க முடிவதில்லை என்றாலும், அவரை நடிக்க வைத்து ரசிகர்களை சில இயக்குனர்கள் திருப்தி செய்து வருகின்றனர். குரங்கு பொம்மை பாண்டியநாடு நம்ம வீட்டுப் பிள்ளை திருச்சிற்றம்பலம் திரு மாணிக்கம் என படங்களில் பாரதிராஜா நடிப்பு, இதயம் தொட்டது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் சூரி வேல ராமமூர்த்தி சமுத்திரக்கனி நட்டி அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாத்தா கேரக்டரில் வைத்தியராக இயக்குனர் பாரதிராஜா நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்போது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முதல் படத்தில் நடித்த போது ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்கிய அவர், இப்போது தனது 25வது படம் பராக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 75 கோடி என்று சொல்லப்படுகிறது. அரசியலுக்கு விஜய் செல்வதால், இனி அவரது இடத்தை சிவகார்த்திகேயன்தான் நிரப்புவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நம்ம வீட்டுப்பிள்ளை ஷூட்டிங்கில் நடித்த போது இயக்குனர் பாரதிராஜா, நான் சொல்றதை எழுதிக்கூட வெச்சுக்குங்க. அடுத்து ரஜினி இடத்தை சிவகார்த்திகேயன்தான் பிடிப்பான். அதற்கான வசீகரமான தோற்றமும் ஸ்டைலும் அந்த பையனிடம் இருக்கிறது, என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். ரஜினி இடத்தையே பிடிப்பார் என்று பாரதிராஜா கூறியிருப்பதால், விஜய் இடத்தையும் எளிதில் பிடித்துவிடுவார் என எஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்