- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியிடம் கதை சொன்னால், கடைசியில் அவர் என்ன சொல்வார் தெரியுமா? - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்...

ரஜினியிடம் கதை சொன்னால், கடைசியில் அவர் என்ன சொல்வார் தெரியுமா? – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன ஆச்சரிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா இறைவி ஜிகர்தண்டா பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்த அவர், இப்போது சூர்யா நடித்த ரெட்ரோ படத்தை இயக்கி உள்ளார். வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் ரிலீஸாக உள்ளது.

ரெட்ரோ படம் முதலில் ரஜினிக்காக எழுதிய கதை. பிறகு அதை மாற்றி காதல் கதையாக சூர்யா நடிப்பில் உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்த படத்தில் இருந்து வெளியான கண்ணாடி பூவே கனிமா ஏ ஒன் உள்ளிட்ட பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன. டிரெய்லரும் படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்திருக்கிறது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மிக தீவிரமான ரசிகர் கார்த்திக் சுப்பராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் ரஜினியை இதில் பேட்ட கேரக்டரில் செம மாஸ் ஆக கார்த்திக் சுப்பராஜ் காட்டியிருந்தார்.

சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, நான் எந்த கதையை எழுதினாலும் அதை தலைவர் ரஜினியை மனதில் வைத்துதான் எழுதுவேன். ரெட்ரோ படத்தின் கதை கூட அவரை நினைத்து எழுதியதுதான். கதையை கேட்ட உடனே இது ரஜினிக்காக எழுதிய கதை தானே என சூர்யாவே என்னிடம் கேட்டு விட்டார்.

- Advertisement -

நான் ரஜினியிடம் பல கதைகளை சொல்லி இருக்கிறேன். ஜிகர்தண்டா படம் பார்த்தது முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை பல படங்களின் கதைகளை அவரிடம் நேரில் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் அந்த கதையை கேட்டு விட்டு ஒரு போதும் பிடிக்கவில்லை என்று சொல்லவே மாட்டார்.

அந்த கதையில் அவர் நடிப்பதால் என்ன பிரச்னை, அந்த கதையில் அவர் நடிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள் என்ன என்பது பற்றி தெளிவாக கூறி விடுவார். அதனால் அவருக்கு நான் சொன்ன கதைகள் எல்லாமே பிடிக்கும். ஆனால் அவர் அந்த கேரக்டரில் நடிக்க முடியாத காரணங்களை சொல்லி விடுவார். பிறகு எனக்கும் அது புரிந்துவிடும். அப்படி தான் பலமுறை நடந்திருக்கிறது என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்