தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். ரஜினி கமல் ஸ்ரீதேவி என்ற 3 கேரக்டர்களை வைத்துக்கொண்டு அந்த படத்தில் புது மாதிரியான கதைக்களத்தில் ஒரு கவித்துவமான படத்தை ரசிகர்களுக்கு தந்தார்.
தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் அலைகள் ஓய்வதில்லை கல்லுக்குள் ஈரம் மண் வாசனை கடலோர கவிதைகள் நாடோடித் தென்றல் கண்களால் கைது செய் தாஜ்மகால் கிழக்கு சீமையிலே வேதம் புதிது புதுநெல்லு புதுநாத்து என பல தமிழ் காவியங்களை தமிழ் சினிமாவுக்கு தந்து அசத்தினார்.
இயக்குனராக மட்டுமின்றி திரைப்பட நடிகராகவும் பாரதிராஜா தனது திறமையை வெளிப்படுத்தினார். தனது படங்கள் வாயிலாக கார்த்திக் பாண்டியன் நெப்போலியன் பாக்யராஜ் கவுண்டமணி சுதாகர் மனோஜ் என பல நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.
அதே போல் ராதா ரேவதி ரேகா விஜயசாந்தி ராதிகா ரஞ்சனி ரதி ரஞ்சிதா பிரியாமணி சுகன்யா போன்ற நட்சத்திர நடிகைகளயும் தன் படங்களில் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா. இந்த நிலையில் 84வயதில் அவர் உடல் மூப்பின் காரணமாக நேற்று காலை சென்னையில் இயற்கை எய்தினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பாரதிராஜாவின் சொந்த ஊரான வத்தலகுண்டு கிராமத்தில் அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் நிர்மல்குமார் வன்னி அரசு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள் முழங்க பாரதிராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் பாரதிராஜாவின் மகள் ஜனனி, பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் மற்றும் வைரமுத்து கே பாக்யராஜ் பார்த்திபன் ராதிகா சமுத்திரக்கனி வடிவேலு நிழல்கள் ரவி மாரி செல்வராஜ் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 16 வயதினிலே தந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் தமிழ் சினிமாவில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் விடைபெற்றார்.





