- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டாவது முறையாக சசிகுமார் உடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி... இதன் இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து...

இரண்டாவது முறையாக சசிகுமார் உடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி… இதன் இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…

- Advertisement -

மகாராஜா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஏஸ் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் ஓரளவு பேசப்பட்டாலும், படத்திற்கு சரியான ப்ரமோஷன் இல்லாத காரணத்தால் அது ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.

சொல்லப் போனால் பாதி பேருக்கு இங்கு ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது கூட தெரியாது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி இருந்தது. பாண்டிராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனையை இந்த திரைப்படம் பேசியது.

- Advertisement -

கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் காவியமாக மாறிப்போனது. பலரும் தங்கள் வீட்டாருடன் படையெடுக்க, 75 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டி வெற்றி திரைப்படமாக அமைந்தது. அடுத்ததாக அமேசான் ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதில் அவர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஸ்ருதிஹாசனுக்கும் படத்தில் மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங், விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல், கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் உடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் வெப் சீரிஸும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கு முத்து என்கிற காட்டான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துரை செந்தில்குமார் ஏற்கனவே, எதிர்நீச்சல் கொடி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர். கடைசியாக அவர் இயக்கிய கருடன் திரைப்படமும் வசூலை குவித்தது. தற்போது லெஜெண்ட் சரவணனை வைத்து அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் பிறகு விஜய் சேதுபதி உடனான படத்திற்கு அவர் செல்கிறார். கருடன் திரைப்படத்தைப் போலவே இதிலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் சசிகுமார் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்