- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் - கள்ளக்காதல் என்றால் என்ன? விவகாரமாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சேரன் -...

காதல் – கள்ளக்காதல் என்றால் என்ன? விவகாரமாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சேரன் – இதெல்லாம் உங்களுக்கு தேவையா சார்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களில் அமைந்த சிறந்த வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். குறிப்பாக பாரதி கண்ணம்மா வெற்றிக் கொடி கட்டு பொற்காலம் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி போன்ற அவரது படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன.

இயக்குனராக மட்டுமின்றி சொல்ல மறந்த கதை ராமன் தேடிய சீதை முரண் பிரிவோம் சந்திப்போம் திருமணம் ஆட்டோகிராப் பொக்கிஷம் தவமாய் தவமிருந்து மாயக்கண்ணாடி போன்ற படங்களில் சேரன் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் சேரனின் ஜர்னி என்ற டைட்டிலில் ஒரு வெப் சீரிஸ் சேரன் டைரக்ட் செய்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கன்னக்குழியில் விழுந்த கண்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் இயக்குனர் சேரன் பேசியதாவது, ஒரு பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் ஒரு உயிர் மேல் வைத்திருக்கும் அன்பு தான் காதல். பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது.

காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று எதுவும் இல்லை. சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் தான் கள்ளக்காதல். நமக்கு இது கிடைக்கலையே, நம்மால் இது போல் காதலிக்க முடியலையே என்று பொறாமைப்படுபவர்கள் தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள்.

- Advertisement -

ஆனால் அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டு, யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களை காதலித்து விடுங்கள் என்று சேரன் விவகாரமாக பேசியிருக்கிறார். காதல் கள்ளக்காதல் குறித்து சேரன் பேசிய இந்த கருத்து தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருமண பந்தத்தில் கணவன் மனைவியின் தாம்பத்ய வாழ்க்கை மட்டுமே நமது தமிழ் கலாசாரத்தில் பாரம்பரியத்தில் சிறந்த காதலாக மதிக்கப்படுகிறது. அதுதான் குடும்ப ஒழுக்கமாகவும் போற்றப்படுகிறது. அப்படி இருக்கும் போது யாரை விரும்பினாலும் அவர்களை காதலியுங்கள் என்றால் என்ன அர்த்தம், இப்படியா வரைமுறையின்றி பேசுவது என பலரும் சேரனுக்கு எதிரான விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்