- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிவாஜி கணேசனுக்கு அப்படி ஒரு துயரத்தை கொடுக்க நான் விரும்பவில்லை - தனது படம்...

நடிகர் சிவாஜி கணேசனுக்கு அப்படி ஒரு துயரத்தை கொடுக்க நான் விரும்பவில்லை – தனது படம் குறித்து பேசிய இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். பல படங்கள் கற்பனை கதைகளாக எடுக்கப்பட்ட நிலையில், வாழ்வியல் சார்ந்த உண்மை கதைகளை யதார்த்த கதைகளை ஒரு சில இயக்குனர்கள்தான் திரையில் கொண்டு வந்தனர். அப்படிப்பட்ட நல்ல படைப்பாளிகளில் ஒருவராக இயக்குனர் சேரன் இருந்தார்.

பாரதி கண்ணம்மா பொற்காலம் தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி ஆட்டோகிராப் வெற்றிக்கொடி கட்டு பொக்கிஷம் தேசிய கீதம் என சேரன் இயக்கிய பல படங்கள் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றன. தேசிய விருதுகளை பெற்ற இயக்குனராக சேரன் அடையாளம் பெற்றார்.

- Advertisement -

மேலும் சொல்ல மறந்த கதை பிரிவோம் சந்திப்போம் ராமன் தேடிய சீதை யுத்தம் செய் என பிற இயக்குனர்களின் படங்களிலும் சேரன் நடித்து திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் சேரன் இயக்கிய வெப் சீரிஸ் சேரனின் ஜர்னி பெரிய அளவில் கவனம் பெற்றது. இப்போதும் படங்களை இயக்க, நடிக்க சேரன் ஆர்வமாக உள்ளார். விரைவில் ஆட்டோகிராப் படம் ரி ரிலீஸாகிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் சேரன் கூறியதாவது, நான் நடிகர் திலகம் சிவாஜி சாருக்கு கதை சொல்லி இருக்கிறேன். நான் டைரக்ட் செய்த தேசிய கீதம் படத்தில் விஜயகுமார் நடித்த கேரக்டர் சிவாஜி கணேசன் சார் பண்ண வேண்டியது. ஆனால் உடல் நலம் சரியில்லாததால் அந்த படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கவில்லை.

- Advertisement -

நான் சிவாஜி கணேசன் சாரின் தீவிரமான ரசிகன். பயங்கரமான வெறியன் என்றே சொல்லலாம். அவரை கூட்டீட்டு போய் காரைக்குடியில் அந்த வெயிலில் இறக்கி விட்டு இங்கு நடங்க போங்க என்று அப்படி ஒரு துயரத்தை அவருக்கு கொடுக்க என் மனசு ஒத்துக்கொள்ளவில்லை.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவருக்கு அது பிரச்னையாக மாறுமே அதை வேண்டாம் என்று விட்டுவிட்டேன். கதை சொல்லி அவர் ஓகே சொல்லியும் நான் அவரை நடிக்க வைக்கவில்லை என்று அந்த நேர்காணலில் இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார். பிறகு அந்த கேரக்டரில் தேசிய கீதம் படத்தில் நடிகர் விஜயகுமார் நடித்திருந்தார்.

- Advertisement -

சற்று முன்