- Advertisement -
Homeபொழுதுபோக்கு200 கோடி ரூபாய் வசூலை எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை, எதுவோ ஒன்று கைகூடவில்லை -...

200 கோடி ரூபாய் வசூலை எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை, எதுவோ ஒன்று கைகூடவில்லை – எல்ஐகே பட இயக்குனர் விக்னேஷ் சிவன் புலம்பல்!

- Advertisement -

இயக்குனர் விக்கேஷ் சிவன் இயக்கத்தில் லலித்குமார் தயாரிப்பில் உருவான படம் எல்ஐகே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ எஸ்ஜே சூர்யா சீமான் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் இந்த படத்துக்கு ஆதரவும் இல்லை. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் எல்ஐகே படம் வெளியாகியும் சரியான கவனம் இல்லை.

இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நான் ஒரு கனவுடன் வந்தேன். சிறியதல்ல. பாதுகாப்பானதும் அல்ல. நம்பிக்கையின் புயல். இந்த கதை கோடிக்கணக்கில் எதிரொலிக்கும். திரையரங்கின் சுவர்களில் அதிர வைக்கும் என்ற நம்பிக்கை. நான் கைதட்டளை கற்பனை செய்தேன். அதை திரையரங்குகளில் கண்டேன்.

- Advertisement -

நான் சிரிப்பை வரவழைத்தேன். அதை திரையரங்குகளில் கேட்டேன். ஆனால் இன்னமும் 100 கோடி என்ற மைல்கல்லை தொடவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதைவிட இருமடங்கு வசூலை கற்பனை செய்து இருந்தேன். ஆனால் இன்னமும் எங்கோ ஏதோ ஒன்று சரியாக பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை. இறுதி முடிவு பற்றி சற்று வருத்தமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன்.

ஏனென்றால் முன்பே குறிப்பிட்டது போல இந்த படம் வெளியாவதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர். என் தொலைபேசி பலமுறை ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன். பாராட்டுகளை பெற. நான் போற்றிய குரல்களிடமிருந்து, நான் மதித்த மனங்களிடமிருந்து. ஆனால் எதார்த்தம் அது வேறு ஒரு குரலை தேர்ந்தெடுத்தது. கலவையான வார்த்தைகள் அளவான புன்னகைகள் புகழை விட உரத்த கேள்விகள் இருந்தும் இதோ நான் நிற்கிறேன். உடைந்து போகவில்லை. உலுக்கப்படவில்லை.

- Advertisement -

ஆனால் பெருமிதம் ஆழ்ந்த பெருமிதம். ஏனென்றால் இந்த படத்திற்கு பின்னால் யாரும் காணாத போராட்டங்கள் இருந்தன. தூக்கம் இல்லாத இரவுகள், மௌனமான அச்சங்கள் என்றும் மற்றும் என்னால் மட்டுமே உணர முடிந்த ஆயிரம் தடைகள். கடவுளுக்கு மட்டுமே தெரியும். இங்கு வந்து சேர என்னவெல்லாம் தேவைப்பட்டது என்று. 70 கோடிக்கு மேல் வசூல் மிகப்பெரியது அல்ல. மிகப் பெரியதல்ல. ஆனால் உண்மையானது மற்றும் உழைத்து சம்பாதித்தது.

அதில் 40 சந்தேகத்திற்கு பிறகு வந்தது. தயக்கத்திற்கு பிறகு சராசரி என்ற சொல் அதை சுற்றி புழக்கத்திற்கு வந்த பிறகு அது அதுதான் காதல். திரையரங்குகளுக்குள் நுழைந்த காதல். ரத்தத்தையும் மீறி விமர்சனங்களையும் தாண்டி நம்பிய காதல். ஆகவே என் நன்றி உணர்வு முடிவற்றது. உங்கள் தனிப்பட்ட செய்திகள் விரிவான பாராட்டுகளும் விமர்சனங்களும் கூட. நான் கற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அதில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்