- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தியுடன் இணையப் போகிறாரா கௌதம் மேனன்... ஆனால் கதை மட்டும் அந்த முக்கிய எழுத்தாளருடையதா... அதற்கு...

கார்த்தியுடன் இணையப் போகிறாரா கௌதம் மேனன்… ஆனால் கதை மட்டும் அந்த முக்கிய எழுத்தாளருடையதா… அதற்கு நடிகரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா….

- Advertisement -

நடிகர் கார்த்திக்கு கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் மட்டும் வெளியானது. 96 திரைப்படத்தை எடுத்திருந்த பிரேம் குமார் தான் இதனை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ரிலீசான சமயத்தில் படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதாக பலர் கூறியதால், பெரியளவு அந்த திரைப்படம் கவனிக்கப்படவில்லை.

இருப்பினும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நன்றாக இருப்பதாக பலரும் கூறினார்கள். ஓடிடி தளத்தில் மெய்யழகன் வெளியாகி பேசப்பட்டது. குடும்ப உறவுகளை மிக கச்சிதமாக காட்டி இருப்பதாக இயக்குனரை பலரும் பாராட்டினார்கள்.

- Advertisement -

இதனை தொடர்ந்து அடுத்ததாக வா வாத்தியாரே என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுத்து ரசிகர்களை சம்பாதித்த நலன் குமாரசாமி தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர் ரசிகர்களை மையப்படுத்தி மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கியிருப்பதால் இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்குப் பிறகு சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார் கார்த்தி. இதன் முந்தைய பாகம் ஏற்கனவே வரவேற்பு பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பி எஸ் மித்ரன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தின், சூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது டப்பிங் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார் கார்த்தி. தொடர்ந்து டானாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்க இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பீரியட் காலத்தில் கேங்ஸ்டர் கதையாக இது எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தியை கெளதம் மேனன் சந்தித்து ஒரு கதையை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை பிடித்துப் போனதால் கார்த்தியும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஏற்கனவே வெற்றிமாறன் கதையில் ரவி மோகனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கௌதம் மேனன். இந்த பணிகளை முடித்துவிட்டு அவர் கார்த்தியுடன் கை கோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு கதை எழுதிய, ஜெயமோகன் தான் இந்த திரைப்படத்திற்கும் கதை எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்