- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது? முக்கிய தகவலை வெளியிட்ட படத்தின் இயக்குனர் எச் வினோத் -...

ஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது? முக்கிய தகவலை வெளியிட்ட படத்தின் இயக்குனர் எச் வினோத் – பலத்த ஏமாற்றத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சாரில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் அந்த படம் குறிப்பிட்ட 9ம் தேதியன்று ரிலீஸ் ஆகவில்லை. இது தளபதி ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது.

ஜனநாயகன் படம் ரிலீஸ் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து நடந்த வழக்கு விசாரணையில் சென்சார் போர்டு தரப்பிலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்தது.

- Advertisement -

இதையடுத்து வருகிற 27ம் தேதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் ரிலீஸ் குறித்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை நீதிபதிகள் அமர்வு, தங்கள் தீர்ப்பில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த தீர்ப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் எச் வினோத் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு அனைத்து வேலைகளையும் செய்து முடித்தோம். ஆனால் எதிர்பாராத சில தடைகளால் தாமதம் ஏற்பட்டு விட்டது. எல்லாமே நம்மை மீறி நடக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் அமைதி காப்பதே அனைவருக்கும் நல்லது.

- Advertisement -

அத்துடன் வருகிற 27ம் தேதி நீதிமன்றம் நல்ல தீர்ப்பு சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதையடுத்து சென்சார் போர்டு சான்றிதழ் கொடுத்து விட்டால் ஜனநாயகன் படத்தை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடுவதற்கு திட்டமிடுவோம். ஜனநாயகன் படம் தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ரசிகர்களை ஏகோபித்த வரவேற்பை பெறும்.

வசூல் ரீதியாக எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய சாதனை செய்யும் என்று இயக்குனர் எச் வினோத் அந்த பதிவில் கூறியிருக்கிறார். ஜனவரி மாதம் ஜனநாயகன் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக இயக்குனர் எச் வினோத் கூறியிருப்பது தளபதி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அதே நேரத்தில் கோர்ட் உத்தரவு சாதகமாக இருந்தால்தான் பிப்ரவரி ரிலீஸ் சாத்தியமாகும் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்