தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் எச் வினோத். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். 6 மாதங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடுகிறது.
இயக்குனர் எச் வினோத் இயக்குனராக அறிமுகமான படம் சதுரங்க வேட்டை. தொடர்ந்து தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கினார். நடிகர் அஜீத்குமார் நடிப்பில் தொடர்ந்து 3 படங்களை இயக்கியவர் எச் வினோத் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் நடிகர் அஜீத்குமார் ஹூமா குரேஷி சுமித்ரா உள்ளிட்டோர் நடித்த வலிமை படம் குறித்து இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, நான் இயக்கிய படங்களிலேயே வலிமை திரைப்படம் தான் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அந்த அனுபவம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்தது.
வலிமை படத்தை உருவாக்கும் போதே அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொண்டோம். அந்த படம் மிகப்பெரிய வர்த்தக வெற்றியை பெற்றது. மேலும் குடும்ப ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது.
அதனால் என்னுடைய இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. உண்மையில் விஸ்வாசம் போன்ற ஒரு திரைப்படத்தை என்னால் உருவாக்க முடியாது என்பது எனக்கு தெரியும். ஏனெனில் அந்த வகை கதை சொல்லும் பாணி என் இயல்பான படைப்பாற்றலுக்கு பொருந்தாது.
இருந்தாலும் அஜீத் குமார் படம் என்பதால் வணிகரீதியாகவும் குடும்ப ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் அந்த படத்தை உருவாக்க முயற்சித்தோம். அதனால் வலிமை திரைப்படம் பல கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது என்று இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்





