- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 அடுக்கு பாதுகாப்பு, 70 பேர் உஷார் நிலையில் நடக்கும் சிக்கந்தர் படம் ஷூட்டிங், துப்பாக்கி...

4 அடுக்கு பாதுகாப்பு, 70 பேர் உஷார் நிலையில் நடக்கும் சிக்கந்தர் படம் ஷூட்டிங், துப்பாக்கி பட இயக்குனருக்கே இப்படி ஒரு சோதனையா? என்ன கொடும சார் இது?

- Advertisement -

இந்தி பட உலகில் முன்னணி ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். சில ஆண்டுகளுக்கு முன் மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தங்களது குலதெய்வமாக கருதும் மானை சுட்டுக்கொன்றதாக லாரன்ஸ் பிஷ்னோய் என்ற பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சல்மான்கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குரூப் சார்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சல்மான்கான் ராஸ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தை தமிழ் சினிமா இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். இடையில் எஸ்கே 23 என்ற சிவகார்த்திகேயன் படத்தையும் ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிக்கந்தர் ஷூட்டிங் நடக்கும் ஓட்டலில் சல்மான்கானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாதம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது ஐதராபாத்தில் உள்ள பாலக்னுமா பேலஸ் ஓட்டலின் ஒரு பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது. இருந்த போதிலும் ஓட்டல் முடிவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டல் சல்மான் கானின் பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் விருந்தினர்கள் தங்குவதற்கு ரூம்கள் புக் செய்யலாம். ஆனால் ஓட்டலுக்கு வரும்போது பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டலில் உள்ள ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோரும் பலத்த சோதனைக்கு பிறகுதான் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

- Advertisement -

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பைத் தாண்டி மேலும் 2 அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் பாதுகாப்பு அமைப்பை சல்மான்கானுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். தற்போது சல்மான் கான் எப்போதும் 50 முதல் 70 பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ அவர்களது கண்காணிப்பில் இருந்து வருகிறார். சல்மான் கானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு சிஸ்டம் உள்ளது. முன்னாள் துணை ராணுவ வீரர்கள் வாடகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நீண்ட காலமாக சல்மான்கானுக்கு பாதுகாப்பு படை உள்ளது மேலும் ஐதராபாத் போலீஸ் மற்றும் மும்பை போலீசார் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து சல்மான்கான் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திற்கு, படப்பிடிப்பு தளத்தில் இப்படி ஒரு பாதுகாப்பான நிலைமையா என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்