- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் முதல்வர் ஆவார் என்று நானே நினைக்கலே, ஜனநாயகன் படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருமான்னு...

விஜய் முதல்வர் ஆவார் என்று நானே நினைக்கலே, ஜனநாயகன் படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருமான்னு எனக்கு தெரியாது – வெளிப்படையாக பேசிய இயக்குனர் எச் வினோத்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நாளை மறுதினம் 23ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 800 தியேட்டர்களிலும் பிற மாநிலங்கள் வெளிநாடுகள் என மொத்தம் 8000 தியேட்டர்களிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. 6 மாதங்கள் தாமதமாக இந்த படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் எச் வினோத் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த பிறகு இப்போது வெளியாகும் படத்தில் எந்த மாற்றமும் இல்லை. காரணம் சென்சார் தரப்பிலிருந்து அதில் எந்த மாற்றமும் திருத்தமும் செய்யக்கூடாது என்று கூறிவிட்டனர்.

- Advertisement -

அதனால் புதிதாக தெரிவதற்கான சின்ன சின்ன விஷயங்கள் இருக்கின்றன. நீக்கப்பட்ட சில புதிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தற்போது படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனக்கு தெரிந்தவரை நிறைய பேர் ஜனநாயகனை பார்த்து விட்டனர். அவர்கள் உறுதியாக திரையரங்கம் வருவார்கள் என்பதையும் சொல்ல முடியவில்லை. கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சீரியசான கருத்துக்களை கொண்டதாக இருக்கும்.

ஆனால் என் வேண்டுகோள் என்னவென்றால் இது ஒரு கமர்சியல் திரைப்படமும் இல்லை. தவெக கட்சியை புகழும் படமோ இல்லை. இந்த படம் ஒரு நல்ல அரசியலை பேசுகிறது. அதனால் ரசிகர்கள் இந்த படத்தை இணையத்தில் பார்த்திருந்தாலும் திரையரங்குகளிலும் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது எனக்கு மட்டுமல்ல. விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் கஷ்டமாகவே இருந்தது.

- Advertisement -

ஏனென்றால் விஜய் என்றாலே குழந்தை ரசிகர்கள் அதிகம். அவர்கள் திரையரங்கம் வர முடியாது என்பது வருத்தமானது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை குழுவின் சான்றிதழ் தாமதமானதால் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. படம் இணையத்தில் கசிந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சூழலில் விஜயும் மிகவும் வருத்தம் அடைந்தார். ஆனால் என்னை உடனே தொடர்பு கொண்டு, கவலைப்படாதீங்க. இப்படிப்பட்ட பிரச்னைகள் சினிமாவில் நடக்கக் கூடியதுதான். இதையும் நாம் சேர்ந்து சமாளிப்போம் என்று ஆறுதல் கூறினார்.

இந்த படம் 200 சதவீதம் விஜய்க்கான மாஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வர் ஆவார் என நான் நினைக்கவில்லை. நான் மட்டுமல்ல பலரும் அவரை குறைவாகவே மதிப்பிட்டு விட்டோம். அவர் மக்கள் மீது வைத்திருக்கிற அக்கறையும் மக்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பும் இப்போது பிரமாண்டமாக தெரிகிறது என்று இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்