தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்தே தீருவேன் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் தவெக மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்.
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அவர் தனது அப்பா விஜயை போல சினிமாவில் ஹீரோவாக வருவார் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். வேட்டைக்காரன் என்ற விஜய் நடித்த படத்தில், நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே பாடல் காட்சியிலும் சிறுவனாக அப்பாவுடன் நடனமாடி அசத்தி இருந்தார்.
நல்ல அழகான முகவெட்டும் கம்பீரமான தோற்றமும் கொண்ட ஜேசன் சஞ்சய் நிச்சயமாக ஹீரோவாக நடிக்கும் கெட்டப்பில் மிக அழகாக தான் இருக்கிறார். ஆனால் அவர் தாத்தா எஸ்ஏ சந்திரசேகரை போல சினிமா இயக்குனராக ஆசைப்பட்டு அதற்கான படிப்பை வெளிநாடுகளில் முடித்திருக்கிறார். சில குறும்படங்களை இயக்கிய அவர், இப்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக களத்தில் குதித்திருக்கிறார்.
லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கிறார். ராயன் படத்தில் தனுஷின் 2 சகோதரர்களில் ஒருவராக அபர்ணா பாலமுரளிக்கு ஜோடியாக நடித்தவர்தான் சந்தீப் கிஷன். இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கவில்லை. 8 கோடி ரூபாய் பணம் இல்லாததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக கச்சிதமாக எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
லைகா புரடக்சன்ஸ் கொடுத்த பட்ஜெட்டில் படத்தை சொன்னபடி எடுத்து சிறப்பாக முடித்திருக்கிறார் இயக்குனர் ஜேசன் சஞ்சய். ஆனால் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங் உள்ளது. அந்த பாடலை படத்தின் இசையமைப்பாளர் தமன் இன்னும் கொடுக்கவில்லை. அதனால்தான் படம் தடைபட்டுள்ளது. பணமும் ரூ. 8 கோடி வர வேண்டும், ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.





