- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் விஜயுடன் நானும் நடித்திருக்கிறேன் - தனது கேரக்டர் குறித்த உண்மையை போட்டுடைத்த தவெக...

ஜனநாயகன் படத்தில் விஜயுடன் நானும் நடித்திருக்கிறேன் – தனது கேரக்டர் குறித்த உண்மையை போட்டுடைத்த தவெக அமைச்சர்!

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 23ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் வெளிநாடுகள் என உலகம் முழுவதும் மொத்தம் 8000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இன்று முதல் படத்துக்கான முன்பதிவு துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே பாபி தியோல் மமீதா பைஜூ பிரகாஷ்ராஜ் நரேன் கௌதம் மேனன் பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் தாமதமாக இப்போதுதான் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

ஜனநாயகன் படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடிகர் விஜய் நடித்த படங்களில் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்துக்குதான் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் இந்த படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜயின் நெருங்கிய நண்பர் மற்றும் தற்போதைய தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீநாத் இந்த தகவலை அவரே வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் கூறியதாவது, ஜனநாயகன்படத்தில் விஜய்க்கு இஸ்லாமிய நண்பனாக நான் நடித்துள்ளேன்.

- Advertisement -

நண்பனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் தேவைப்பட்டால் உயிரையே தியாகம் செய்யும் கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இஸ்லாமியர்களின் பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விஜய்க்கும் பிரியாணி மிகவும் பிடித்தமான உணவு என்று அமைச்சர் ஸ்ரீநாத் கூறியிருக்கிறார்.

ஜனநாயகன் படம் வெளிவர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தது குறித்தும் அதில் தனது கேரக்டர் குறித்தும் அமைச்சர் ஸ்ரீநாத் வெளிப்படையாக பேசியது அந்த படத்துக்கு லேட்டஸ்ட் அப்டேட் ஆக அமைந்து விட்டது. மேலும் வேட்டைக்காரன் படத்திலும் விஜய்க்கு நண்பராக ஸ்ரீநாத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்