தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர் மற்றும் சீனியர் நடிகராக வலம் வந்தவர் கே பாக்யராஜ். சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ். மகன் சாந்தணு மகள் சரண்யா. இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று புகழ் பெற்றவர் கே பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் கிராமத்தில் 1953ம் ஆண்டில் பிறந்தவர் பாக்யராஜ். இயக்கத்தில் பாரதிராஜா இயக்கிய முதல் படம் 16 வயதினிலே தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989ம் ஆண்டு எம் ஜி ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்று கட்சியை துவக்கினார்.
அதன்பிறகு எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் கட்சியை கலைத்து விட்டு ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்தார். பிறகு 2006ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுகவுக்கு ஆதரவாளராக இருந்தாலும் அந்த கட்சியில் எந்த பொறுப்பும் பதவியும் அவர் வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே பாக்யராஜ் பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் இன்று போய் நாளை வா சின்ன வீடு என ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியர் கே பாக்யராஜ். அவரது படங்களில் அவரே நாயகனாகவும் நடித்தார்.
எம்ஜிஆர் மீது அதிக அன்பும் மரியாதையும் கொண்டவர் கே பாக்யராஜ். என்னுடைய கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று காலை கே பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த மாதம் 10ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். தனது குருநாதர் மறைந்த 2 வாரங்களில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார் என்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





