- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பில் இயக்குனர் கே பாக்யராஜூடன் கடும் வாக்குவாதம் செய்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இரவு...

படப்பிடிப்பில் இயக்குனர் கே பாக்யராஜூடன் கடும் வாக்குவாதம் செய்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இரவு 2 மணிக்கு போனில் அழைத்து என்ன சொன்னார் தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ராதா ரேவதி மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் நடித்த படம் ஒரு கைதியின் டைரி. இந்த படத்துக்கு கே பாக்யராஜ் திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்தின் இந்தி ரீமேக் படம் தான் ஆக்ரி ராஸ்தா கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழில் வெளியான ஒரு கைதியின் டைரி படத்தில் கமல் அப்பா மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்தது போலவே ஆக்ரி ராஸ்தா இந்தி படத்திலும் அமிதாப் பச்சன் தந்தை மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் ஸ்ரீதேவி மற்றும் ஜெயப்பிரதா ஆகியோரும் நடித்திருந்தனர். இயக்குனர் கே பாக்யராஜ் இந்தியில் இயக்கிய முதல் படமும் ஒரே படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு காட்சியில் அமிதாப் பச்சன் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை இங்கிலீஷில் பேசுவது போல் ஒரு காட்சி வைத்திருந்தேன். தமிழிலும் கமல் நடித்த போது அப்படி ஒரு காட்சி இருந்தது. ஆனால் அப்படி நான் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி நடித்தால் இந்தி ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று அமிதாபச்சன் என்னிடம் கூறிவிட்டார்.

நான் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது தான் அந்த காட்சியில் ஹைலைட். அதில் நீங்கள் பேசும் விஷயங்கள் தான் முக்கியமாக படும். அதனால் அந்த காட்சியின் நடியுங்கள் என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் நிச்சயமாக அப்படி நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளருக்கு நெருக்கடி தர கூடாது என்ற காரணத்தால் அந்த காட்சியில் அவர் நடித்து முடித்தார்.

அதன்பிறகு அந்த படம் உருவானது. அப்போது படத்தின் முதல் பிரிவியூ காட்சியை தியேட்டரில் பார்த்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு எனக்கு அமிதாப் பச்சன் போன் செய்தார். அப்போது அவர் என்னை வெகுவாக பாராட்டினார். உண்மையில் அந்த குறிப்பிட்ட அந்த காட்சிக்குதான் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கைதட்டலும் கிடைத்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் வீட்டு வேலைக்காரர்கள் டிரைவர் உள்ளிட்ட பலரும் அந்த காட்சியைத் தான் வெகுவாக ரசித்தார்கள்.

தியேட்டரில் இருந்த அனைவருக்கும் அந்த காட்சிக்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கொடுத்தார்கள். என் மனைவி கூட வழக்கமாக என் படத்தைப் பார்த்தால் இது அமிதாப்பச்சன் படம் என்பார். ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு, இது உங்கள் படமல்ல டைரக்டர் பாக்யராஜ் படம் என்று கூறிவிட்டார் என்று அமிதாபச்சன் என்னிடம் ஃபோனில் பேசினார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் கே பாக்யராஜ் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்