- Advertisement -
மலையாள ஸ்டார் நடிகர் மம்முட்டி மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படமும் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஏஒடி திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன. வருகிற நவம்பர் 20ம் தேதி அப்பா – மகன் நடித்த 2 படங்களும் வெளியாகின்றன. அப்பா மம்முட்டி மகன் துல்கர் சல்மான் இருவருமே நட்சத்திர அந்தஸ்தில் உள்ள முன்னணி நடிகர்கள். அவர்கள் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





