- Advertisement -
Homeபொழுதுபோக்குவிருது வாங்கும் அளவுக்கு தனுஷூக்கு அவ்வளவு பெரிய புத்திச்சாலித்தனம் எல்லாம் கிடையாது - இயக்குனர் கஸ்தூிராஜா...

விருது வாங்கும் அளவுக்கு தனுஷூக்கு அவ்வளவு பெரிய புத்திச்சாலித்தனம் எல்லாம் கிடையாது – இயக்குனர் கஸ்தூிராஜா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் மத்திய அரசின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் தனுஷூக்கு கேப்டன் மில்லர் ராயன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் லப்பர் பந்து ஜமா வாழை மகாராஜா போன்ற சிறந்த படங்கள் இருந்த போது தனுஷ் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதுவும் படங்கள் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்த தகுதியற்ற இந்த படங்களுக்கு ரசிகர்கள் விரும்பாத படங்களுக்கு தேசிய விருது என்பது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. தங்கலான் படத்துக்காக மிக சிறந்த வெளிப்படுத்திய சியான் விக்ரம் ஆடுகளம் படத்தில் அழுத்தமான நடிப்பை தந்த மலையாள நடிகர் பிருத்விராஜ் போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ஆனால் தனுஷூக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது ஏன் என்பது விமர்சனமாக மாறியுள்ளது. இதுகுறித்து அவரது தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் தனுஷூக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது மகிழ்ச்சி தான். அவர் பயணம் செய்கிற வழி அவருடைய முயற்சிகள் அனைத்துமே அப்படியே இருக்கிறது.

அதனால் அவருக்கு விருது கிடைத்திருக்கிறது. மற்றபடி அதில் அரசியல் நிலைப்பாடு என எதுவும் இல்லை . திரைப்பட விருதுக்கான நடுவர் குழு எடுக்கும் முடிவுகளில் தான் தேசிய விருது கிடைக்கிறது. இந்த முறை என் மகனுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மிகவும் பெருமையான விஷயம். தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா?

- Advertisement -

அவர்கள் ஏன் நடுவர் குழுவை அதிகாரம் செலுத்தி தேசிய விருதுகள் வாங்கவில்லை? இது அரசு மற்றும் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுதான் என்று நான் நினைக்கிறேன். 4 பேரை பேசி பார்த்து பேசி ஐயா எனக்கு விருது கொடுங்க என்று சொல்லும் அளவுக்கு தனுஷூக்கு அவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் கிடையாது.

இதற்கு முன்பாக முன்னதாக அரசன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக அவருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் விருதுகளுக்காக ஏங்குபவர் கிடையாது. தனுஷ் அழைத்தால் படத்தின் நடிக்கப் போவேன். ஆனால் செல்வராகவன் நடிக்க கூப்பிட்டால் போகமாட்டேன். அவருடன் நடிப்பது கடினம். தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும். இல்லையென்றால் இருக்கட்டும். அதைப்பற்றி எதுவும் கேட்டுக் கொள்ள மாட்டோம் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்