- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் தெரியாம சொல்லிட்டேன்… மன்னிச்சிடும்மா இயக்குனர் பாலு மகேந்திரா கேட்டது ஏன்? - நடிகை கோவை...

நான் தெரியாம சொல்லிட்டேன்… மன்னிச்சிடும்மா இயக்குனர் பாலு மகேந்திரா கேட்டது ஏன்? – நடிகை கோவை சரளா சொன்ன அந்த சம்பவம்!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய படங்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் கோவை சரளா. சின்ன வீடு முந்தானை முடிச்சு போன்ற படங்களில் அவர் கொங்கு தமிழ் பேசி நடித்த அழகை பார்த்து பல படங்களில் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.

அதன்பிறகு கவுண்டமணி செந்தில் எஸ்எஸ் சந்திரன் போன்ற காமெடி நடிகர்களுக்கு பல படங்களில் ஜோடியாக கோவை சரளா நடித்திருந்தார். கடந்த 1980களில் வெளியான பல படங்களில் கவுண்டமணி அல்லது செந்திலுக்கு கோவை சரளா தான் ஜோடியாக நடித்திருந்தார். இப்போதும் கோவை சரளா படங்களில் அம்மா பாட்டி கேரக்டர்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே கடந்த 1990களில் வெளியான காமெடி படம் சதிலீலாவதி. இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த் ஹீரா ராஜா கல்பனா சொக்கலிங்க பாகவதர் மதன்பாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கேமியோ ரோலில் கோவை தம்பதியாக கமல் கோவை சரளா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கோவை சரளா கூறியதாவது, சதிலீலாவதி படத்தில் கமலுக்கு நான் ஜோடியாக வேண்டாம் என்று டைரக்டர் பாலுமகேந்திரா சொல்லி விட்டார். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர், கோவை சரளாவை ஜோடி என்கிறீர்களே என்று கமலிடம் அவர் கேட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கமல் சொல்லி இருக்கிறார். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒரு மாதம் வரை கமல் பாலுமகேந்திராவிடம் இதுகுறித்து பேசவே இல்லை.அதன் பிறகு படத்தில் அவர்தான் ஹீரோ, தயாரிப்பாளரும் அவர்தான். நாம் ஏன் இதற்கு மறுப்பு சொல்ல வேண்டும் என்று இயக்குனர் பாலு மகேந்திரா நினைத்திருக்கிறார்.

அதனால் கமலிடம் உங்கள் இஷ்டம் போல கோவை சரளாவே அந்த கேரக்டரில் நடிக்கட்டும் என்றும் கூறியிருக்கிறார். பிறகு சதிலீலாவதி படம் வெளியான பிறகு என்னிடம் பேசிய இயக்குனர் பாலுமகேந்திரா, கமல் சொன்னதுதான் கரெக்ட். இந்த கேரக்டருக்கு நீங்க தான் சரி. நான்தான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டேன். ஸாரிம்மா என்று என்னிடம் சொன்னார் என்று நடிகை கோவை சரளா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்