- Advertisement -
சமீபத்தில் நடந்த டோரதி பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் திறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது படத்தில் இரட்டை ஹீரோக்களாக நடித்த ரிஷிகாந்த் சனந்த் பங்கேற்றனர். அவர்களிடம் மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், சினிமாவில் ஒரு ஹீரோன்னா 200 பேரை அடிக்கணும். காதலிக்கணும். சென்டிமென்ட்டா பேசணும் அப்படீங்கற டெம்ப்ளேட்டை உடைத்துவிட்டு நிஜமான ஹீரோக்களாக நீங்கள் இருவரும் இருக்கறீங்க. உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கு. நீங்களும் ரசிகர் மன்றங்களை அமைத்து இதையெல்லாம் காமெடியாக்கி விடாதீங்க. அதை உணர்ந்து செயல்படுங்கள் என்று கூறிய இயக்குனர் மிஷ்கின், அவர்கள் இருவருக்கும் தனது கை விரல்களில் அணிந்திருந்த 2 தங்க மோதிரங்களை கழட்டி பரிசாக வழங்கினார்.





