- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பளமே வேண்டாம்… நான் வந்து நடிக்கிறேன், தானாக முன்வந்த இயக்குனர் மிஷ்கின் - இதற்கு பின்னால்...

சம்பளமே வேண்டாம்… நான் வந்து நடிக்கிறேன், தானாக முன்வந்த இயக்குனர் மிஷ்கின் – இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தந்து தனக்கென ஒரு அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே வித்யாசமான கதைக்களத்தில் உருவானவை. சித்திரம் பேசுதடி அஞ்சாதே சைக்கோ துப்பறிவாளன் என ஒவ்வொரு படமும் மாறுபட்ட திரைக்கதை அம்சம் கொண்ட படங்களாக இருந்தன.

இயக்குனராக மட்டுமின்றி படங்களிலும் மிஷ்கின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மாவீரன் லியோ சவரக்கத்தி டிராகன் வணங்கான் என ஒவ்வொரு படத்திலும் மிஷ்கின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. இப்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் நடுவராக பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் மிஷ்கின். அடுத்து டிரெயின் என்ற படம் மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் நாயகனாக நடித்திருக்கிறார். இது ஒரு ரயிலில் பயண நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியது.

இயக்குனர் மிஷ்கின் ஆரம்பத்தில், யூத் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வின்சென்ட் செல்வா என்பவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன்பிறகுதான் சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பிறகு பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திர இயக்குனராக மாறினார். இப்போது படங்களில் நடிக்க பல கோடி ரூபாய் மிஷ்கின் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் வின்சென்ட் செல்வா புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்கிறார்.

நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சார்ட் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பலத்த பைனான்ஸ் சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர் மிஷ்கின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் தனது குருநாதர் வின்சென்ட் செல்வா இயக்குகிற படம் என்பதால் இந்த படத்தில் சம்பளமே இல்லாமல் மிஷ்கின் நடிக்க முன்வந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்