- Advertisement -
Homeபொழுதுபோக்குமிரட்டல் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மறைவு, சோகத்தில் தமிழ் திரையுலகினர் -...

மிரட்டல் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மறைவு, சோகத்தில் தமிழ் திரையுலகினர் – அந்த பிரபல நடிகரின் தம்பியா இவர்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் நடிகராக தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தியர் டேனியன் பாலாஜி. வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, வடசென்னை, பைரவா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மிக அற்புதமான வில்லனாக, ரசிகர்களை கவர்ந்தவர்.

முதலில் சீரியல் நடிகராக தன் நடிப்பு பயணத்தை துவக்கியவர். சித்தி தொடரில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார். இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

டேனியல் பாலாஜி நடிப்பில் பொல்லாதவன் படம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. அதே போல், வேட்டையாடு விளையாடு படத்தில் மருத்துவ மாணவர்களாக இருந்துக்கொண்டு டேனியல் பாலாஜியும், அவரது நண்பனும் செய்யும் படுகொலைகள்தான் படத்தின் மையக் கருவாக இருந்தது. எந்த வில்லன் பாத்திரத்திலும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் மிரட்டலான நடிப்பை தந்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த டேனியல் பாலாஜிக்கு 48 வயது என்று கூறப்படுகிறது. அவரது மறைவு செய்தி, தமிழ் சினிமாத்துறை சார்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

தகவலறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், கவுதம் மேனன் ஆகியோர் வந்துள்ளனர். சமீபத்தில்தான் காமெடி நடிகர் சேஷூ காலமானார். அவரை தொடர்ந்து இப்போது வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி இறந்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து மறைந்து வருவது சினிமாத்துறையினரை கலங்கடித்து வருகிறது.

இறந்த நடிகர் டேனியல் பாலாஜி குறித்த மற்றொரு முக்கிய தகவல் இப்போது வெளிவந்துள்ளது. நடிகர் முரளியின் தம்பிதான் இவர் என்று, அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அதாவது நடிகர் அதர்வாவுக்கு, டேனியல் பாலாஜி சித்தப்பா ஆகிறார். நடிகர் முரளி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். அவரது தம்பி டேனியல் பாலாஜி என்ற தகவலே, அவர் இறந்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்