- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் இன்றைய நிலை இதுதான் - கிங்ஸ்டன் பட விழாவில் வெளிப்படையாக பேசிய இயக்குனர்...

தமிழ் சினிமாவின் இன்றைய நிலை இதுதான் – கிங்ஸ்டன் பட விழாவில் வெளிப்படையாக பேசிய இயக்குனர் பா ரஞ்சித்!

- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த வெங்கட்பிரபு, நடிகராக பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியாத நிலையில், சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார்.

அப்போது சென்னை 28 படத்தில் டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரித்தவர்தான் பா ரஞ்சித். கடந்த 2012ம் ஆண்டில் அட்டகத்தி என்ற படத்தை இயக்கி அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் தினேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் நந்திதா கலையரசன் உள்ளிட்டோர் அறிமுகமாகி நடித்திருந்தனர்.

- Advertisement -

யதார்த்தமான கதைக்களத்தில் உருவான அட்டக்கத்தி படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த படத்தை தொடர்ந்து அடுத்து நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தை பா ரஞ்சித் இயக்கினார். அந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது.

ஒரு சுவரில் அரசியல்வாதியின் உருவத்தை வரைவதன் மூலம் ஏற்படும் அரசியல் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த மெட்ராஸ் படம் பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பா ரஞ்சத்தின் இயக்குனர் இமேஜ் உயர்ந்தது. இதையடுத்து பா ரஞ்சித் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி காலா ஆகிய ஹிட் படங்களை இயற்றினார். அதை தொடர்ந்து கடந்த ஆண்டில் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் திவ்ய பாரதி இணைந்து நடித்த கிங்ஸ்டன் என்ற படம் வரும் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் அவர் பேசுகையில், தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. தமிழ் சினிமாவில் இந்த சவாலான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நேரத்தில் இது மாதிரியான கதையை நம்பி படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது பெரிய விஷயம். அதை அடைய நினைக்கும் கிங்ஸ்டன் படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்று பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் கடினம் என்று பா ரஞ்சித் கூறியிருப்பது, சில அரசியல் காரணங்களை கோடிட்டு காட்டுவதாக இணையத்தில் அவரது கருத்து வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்