- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவுக்கு எலியால் வந்த பிரச்னை இன்னுமே தீரலையா? - வில்லனாக நடிச்சாலும்...

நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவுக்கு எலியால் வந்த பிரச்னை இன்னுமே தீரலையா? – வில்லனாக நடிச்சாலும் அவர்தாம்பா படத்துல ஹீரோ…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும்தான் எப்படி நடித்தாலும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களாக இருக்கின்றனர். கதாநாயகன், வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என எந்த மாதிரியான ரோலிலும் அவர்களால் மட்டுமே ஸ்கோர் பண்ண முடியும். ஏனென்றால், அவர்களது நடிப்பு திறமை எப்படிபட்ட கேரக்டரிலும் மிக சிறப்பாக வெளிப்படும்.

தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட நடிகர்களாக எம்என் நம்பியார், எஸ்ஏ அசோகன், தேங்காய் சீனிவாசன், ரகுவரன், நாசர், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு அத்தகைய நடிப்பு திறன் உண்டு. அந்த வரிசையில் இப்போது மிக முக்கியமானவராக இருப்பவர் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா. அவர்தான் இப்போதைக்கு முன்னணி நட்சத்திரமாய் தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார்.

வாலி, குஷி படங்களின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த அவர், முதலில் இயக்குனராக ஜெயித்தார். அஜீத்குமார், விஜய் ஆகியோரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தினார். பிறகு நியூ, அ ஆ, கள்வனின் காதலி போன்ற படங்கள் மூலம் நடிகராக தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தினார். ஆனால் திடீரென 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவை விட்டே காணாமல் போனார்.

பிறகு மீண்டும் வந்த எஸ்ஜே சூர்யா இறைவி, இசை போன்ற படங்கள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நடித்த எஸ்ஜே சூர்யாவுக்கு மான்ஸ்டர், ஸ்பைடர், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது, அதிலும் வில்லன் கேரக்டரில் வெறித்தனமான எஸ்ஜே சூர்யாவின் ஆட்டம், ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்தது.

மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி போன்ற படங்களில் படத்தின் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்திருந்தாலும் படத்தின் உண்மையான கதாநாயகனாக இருந்தது எஸ்ஜே சூர்யா தான். அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த படங்கள் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்குமா, ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

இப்போதும் பல முக்கிய படங்களில் வில்லன் கேரக்டரில் நடிக்க கமிட் ஆகி எஸ்ஜே சூர்யா நடித்து வரும் நிலையில், அவருக்கும் ஹீரோ கேரக்டரில் நடிக்க விருப்பம் இருக்கிறது. ஆனால் அவருக்கு ஹீரோ கேரக்டரில் கதை சொல்ல வரும் டைரக்டர்கள் இன்னும் மான்ஸ்டர் படத்தில் வரும் எலி கதையை போன்ற கேரக்டர்களையே திரும்ப திரும்ப சொல்லுவதால், நொந்து போய் விடுகிறார் எஸ்ஜே சூர்யா. எலித்தொல்லை இன்னுமே தீரலையே, என்றும் நெருங்கிய நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா.

சற்று முன்