தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர் விஜய். இப்போது தமிழக முதல்வராக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய 2 ஆண்டுகளில் அவர் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு அதிசயம் நடந்தது இல்லை.
அரசியல் கட்சி துவங்கிய 2 ஆண்டுகளில் தமிழக முதல்வராக சட்டசபைக்குள் சென்ற முதல் அரசியல் தலைவர் விஜய் மட்டும்தான். மேலும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் அவர் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்ததும் விஜய்தான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் விஜய்க்கு தொடர்ந்து சினிமா துறையினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய படங்கள் ரிலீஸ் ஆனால் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் நடத்திக்கொள்ள முதல்வர் விஜய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அரசு அனுமதியுடன் 1 நாள் மட்டுமே சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிடப்பட்டது.
நடிகர் விஜயை வைத்து 2 படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. நடிகர் விஜய் நடித்த சிவகாசி மற்றும் திருப்பாச்சி சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி இன்று வரை விஜய் நடித்த மாஸ் ஹிட் படங்கள் லிஸ்ட்டில் இந்த படங்கள் உள்ளன.
மீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, இன்று இந்த இரண்டும்தான் முக்கியமான பிஸினஸ் ஆக இருந்து வருகிறது. கல்வியும் மருத்துவமும்தான். சாதாரண நடுத்தர மக்களின் வருமானம் மொத்தமும் ஸ்கூல் பீஸ் கட்டறதோடு போயிடும். ரொம்ப நாளா காசு சேர்த்து வைச்சிருந்தான்னா, ஹாஸ்பிடல்ல போய் படுத்தான்னா மொத்த காசும் போச்சு.
இதுவரை சம்பாதித்த சேர்த்து வைத்த காசெல்லம் ஹாஸ்பிடல்லயே போயிடும். நமது உழைப்பில் வந்த சம்பாதியத்தை உறிஞ்சுவதான் இரண்டுதான் ஒன்று கல்வி மற்றொன்று மருத்துவம். இதை கொஞ்சம் முதல்வர் கவனிச்சு சரிசெய்யணும் என்று இயக்குனர் பேரரசு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





