தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை மெல்லத் திறந்தது கதவு வைதேகி காத்திருந்தாள் நான் பாடும் பாடல் குங்குமச்சிமிழ் அம்மன் கோவில் கிழக்காலே ராஜாதி ராஜா தாலாட்டு பாடவா என் ஆசை மச்சான் என பல படங்களை இயக்கிய வெற்றிப் பட இயக்குனராக வலம் வந்தவர்.
ஒருமுறை இளையராஜா 7 ட்யூன்களை போட்டு இருக்கிறார். அந்த ஏழு பாடல்களும் ஒரே படத்தில் வர வேண்டும் என்று அந்த பாடல்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை உருவாக்க வேண்டும். அதற்கு சம்மதிக்கிற இயக்குனருக்கு நான் இந்த டியூன்களை தருகிறேன் என்று வெளிப்படையாக இளையராஜா கூறியிருக்கிறார்.
இந்த தகவல் தமிழ் திரைத்துறையில் அனைவருக்கும் பரவியிருக்கிறது. அப்போது இது எப்படி லாஜிக்காக இருக்கும்? கண்டிப்பாக இது செட் ஆகாது. பாட்டை வச்சு கதை எழுதணுமா? என்றெல்லாம் பலரும் யோசித்துக்கொண்டு அதற்கு முன் வராமல் இருந்த நேரத்தில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் மட்டும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு நான் வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த மாதிரி தான் 7 டியூன்களுக்கும் ஏற்றது போல ஒரு கதையை அவரே உருவாக்கி இருக்கிறார். அந்த கதை வேற எதுவும் இல்லை. நடிகர் விஜயகாந்த் ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் தான். இந்த திரைப்படம் 1984ம் ஆண்டு வெளியாகி சில்வர் ஜூப்ளி படமாகவும் வெற்றி பெற்றது.
அதற்குப் பிறகு பலரும் இந்த முயற்சியை பாராட்டி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய பெரும்பாலான படங்களில் இசை அமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த ஆர் சுந்தர்ராஜன் தற்போது சின்னதிரையில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்று சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துள்ளார். இதுவும் பலருடைய பாராட்டை பெற்றது. மேலும் தமிழில் திருமதி பழனிசாமி அமைதிப்படை காலம் மாறிப்போச்சு தெற்கு தெரு மச்சான் சிகாமணி ரமாமணி சூரியவம்சம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார்.





