- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஆர்ஆர் படத்தை எடுத்து முடிக்க 315 நாட்கள் ஆனது, ஆனால் அதை விட பெரிய படம்...

ஆர்ஆர்ஆர் படத்தை எடுத்து முடிக்க 315 நாட்கள் ஆனது, ஆனால் அதை விட பெரிய படம் வாரணாசி படத்தின் ஷூட்டிங் நாட்கள் – இயக்குனர் ராஜமௌலி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நடிகர் மகேஷ் பாபு மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி வாரணாசி படம் குறித்து கூறியதாவது, வாரணாசி படத்திற்காக நான் அதிக திட்டமிடுதல்களை செய்து முழுமையான தயார் நிலையில் படப்பிடிப்புக்கு சென்றேன். நாங்கள் ஆர்ஆர்ஆர் படத்தை 315 நாட்களில் படமாக்கினோம். ஆனால் வாரணாசி படம் அதைவிட பெரியதாக இருந்த போதிலும் 275 நாட்களில் படமாக்கி 40 நாட்களை சேமித்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்