- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நேரத்தில் தனுஷ் உண்மையை சொல்லாமல் தப்பிச்சுட்டார், தன் தம்பி மீது வருத்தப்பட்டு பேசிய இயக்குனர்...

அந்த நேரத்தில் தனுஷ் உண்மையை சொல்லாமல் தப்பிச்சுட்டார், தன் தம்பி மீது வருத்தப்பட்டு பேசிய இயக்குனர் செல்வராகவன் – ராயன் செய்த தரமான சம்பவம்…

- Advertisement -

நடிகர் கஸ்தூரிராஜா பல கிராமிய படங்களை தந்தவர். எட்டுப்பட்டி ராசா, கரிசக்காட்டு பூவே, என் ஆச ராசாவே என அவரது பல படங்கள் ஹிட் படங்கள்தான். அப்பாவை போலவே மகன் செல்வராகவன் இயக்குனரானார். தன் தம்பி தனுஷை நடிகராக்கியவரும் செல்வராகவன்தான். தெருவில் பசங்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த தனுஷை, துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வைத்தவர் செல்வராகவன்தான்.

துள்ளுவதோ இளமை படம், தனுஷ் – ஷெரீனா நடிப்பில் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தின் கதை பள்ளி பருவத்து காதலை மையமாக கொண்டிருநத்து. இந்த படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜா என்றாலும், உண்மையில் டைரக்டர் செல்வராகவன்தான். கமர்ஷியலுக்காக தனது அப்பா டைரக்டர் பெயரையே டைட்டில் கார்டில் போட்டுவிட்டார் செல்வராகவன்.

- Advertisement -

அதன்பிறகு காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களை தந்து, தமிழ் சினிமாவுக்கு ஒரு ஸ்டன்னிங் டைரக்டர் கிடைத்துவிட்டார் என்ற பெருமையை ஏற்படுத்தினார் செல்வராகவன். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என அவரது படங்கள் பேசியது. ரசிகர்கள், படத்தில் நடித்த ஹீரோக்களை மறந்துவிட்டு இது செல்வராகவன் படம் என்று அவரை தான் அடையாளப்படுத்தி பேசினர்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு செல்வராகவன் படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, என்ஜிகே போன்ற படங்கள் பெரிய ஏமாற்றத்தை தந்தன. அதுதவிர, அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தி, தயாரிப்பாளர்களுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் செல்வராகவன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை முடிப்பதில்லை. படமும் ஓடுவதில்லை என்று குறை கூறினர்.

- Advertisement -

இதையடுத்து படங்களை இயக்குவதை நிறுத்தியிருந்த செல்வராகவன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ம் பாகத்தை இயக்க துவங்கியிருக்கிறார். கதாநாயகன்தான் ரவிகிருஷ்ணாதான். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. இதில் சோனியா அகர்வால் நடிப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால் முதல் பாகத்தில் அவர் இறந்துவிடுவது போல்தான் கதை இருந்தது.

இந்நிலையில் பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசுரன், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய செல்வராகவன், மயக்கம் என்ன படத்தில் ஒரு பாடல் காட்சியில் அடிடா அவள, வெட்றா அவள, உதைடா அவள என பாடலில் வரிகள் வரும். அதை எழுதியது நான் என நினைத்து பலரும் என்னை கடுமையாக விமர்சித்து திட்டினார்கள். ஆனால் அந்த பாடலை எழுதியது தனுஷ்தான். பிரச்னை என்று வந்ததும், அவர் என்னை கைவிட்டு விட்டார், நான் கல்லடி வாங்கினேன் எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்