- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களத்தில் அடிச்சு நிமித்துக்கிட்டு இருக்கிறார், தம்பி நல்லா வரணும் - வாழ்த்து தெரிவித்த நடிகர்...

அரசியல் களத்தில் அடிச்சு நிமித்துக்கிட்டு இருக்கிறார், தம்பி நல்லா வரணும் – வாழ்த்து தெரிவித்த நடிகர் பிரபு – நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகைகள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியல் களத்துக்கு வந்தவர் நடிகர் விஜய். ஆனால் அவர் 33 ஆண்டுகளாக இருந்த சினிமா துறையில் இருந்து அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்குனர் சேரன் போன்றவர்கள் கூட விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகின்றனர். அவருக்கு ஆதரவாக யாரும் பெரிதாக இதுவரை பேசவில்லை.

தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்கும் இந்த வேளையில் நடிகர் பிரபு, நடிகைகள் அம்பிகா கோவை சரளா போன்றவர்கள் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கின்றனர். அதே நேரத்தில் நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலமும் விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது, யப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்? கடல் போல் மக்கள் கூட்டம். தளபதி விஜயை பார்க்க வருபவர்கள் வெயிலில் ரொம்ப நேரம் நிற்காதீர்கள். ரொம்ப ஆபத்தானது. ஸ்ட்ரோக் வர நேரிடும். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். விஜயை பார்க்க வருபவர்கள் அனைவரும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும். அவருக்கு ஒரு தடவை வாய்ப்பு கொடுத்து கொடுத்து தான் பாருங்கள்.

திருநெல்வேலியில் விஜய் பேசியதில் ஒரு எமோஷன் எனக்கு தெரிந்தது. ஆனால் அதை அவர் வெளிக்காட்ட வேண்டாம் என முயற்சி செய்தது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லும்போது அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். கன்னியாகுமரியில் அவர் பேசியது மிகத் தெளிவான பேச்சு. வாய்ப்பு கொடுத்தால் தானே தெரியும் என்று நடிகை அம்பிகா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதேபோல் நடிகை கோவை சரளாவும் ஒரு நேர்காணலில் பேசும்போது நடிகர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அப்போது கோவை சரளா கூறுகையில், விஜய் சார் மெச்சூரிட்டியை பார்க்கிறபோது ரொம்பவும் வியப்பாக இருக்கிறது. குழந்தை போல் தான் பேசுவார். இப்போது மொத்தமாக மாறி விட்டார். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. ஒரு இடத்தில் அவர் வந்து உட்காரணும் என்று. அவரோட பொறுமைக்கு அமைதிக்கும் கடவுள் நிச்சயம் அந்த இடத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன் என்று கோவை சரளா கூறியிருக்கிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு கூறியதாவது, விஜய் தம்பிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எங்க அப்பாவோட ஆசியும் அவருக்கு நிறைய இருக்குது. எங்களோட ஆசிர்வாதமும் அவருக்கு உண்டு. இப்ப தம்பி வந்து தைரியமா அடிச்சு நிமித்தரார்ன்னா ஆண்டவன் அருள் கூட இருக்கு. என் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. தம்பி நல்லா இருக்கணும்ன்னு ஆசைப்படறேன். நல்லா வரணும் என்று நினைக்கிறேன் என்று நடிகர் பிரபு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்