பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜமௌலி. திரைப்படங்களை 2 பாகங்களாக தந்தாலும் அது பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை இந்திய சினிமாவில் கொண்டு வந்ததே ராஜமௌலி தான். பாகுபலி 1 பாகுபலி 2 படங்களுக்கு பிறகுதான் தமிழில் பல படங்கள் 2 பாகங்களாக வெளிவர துவங்கின.
ராஜமௌலி பான் இந்தியா படங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கும் சொந்தக்காரர். அவர் இயக்கிய பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் அபார வெற்றிக்கு பிறகு எல்லா மொழிகளிலும் இதுபோன்ற பான் இந்தியா படங்களின் வருகை அதிகரித்து விட்டது. அதுவும் 2 பாகங்கள் கொண்ட படங்களாகவும் அவை உருவாக்கப்படுகின்றன.
இப்போது தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபு மற்றும் பாலிவுட்டில் நட்சத்திர நடிகையான பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து வரும் படம் வாரணாசி. மிகப்பெரிய பொருட்செலவில் வாரணாசி படத்தை இயக்குனர் ராஜமௌலி டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 1200 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வாரணாசி படம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக மிக பிரமாண்டமான அரண்மனை செட்டுகள் அமைக்கப்பட்டு படக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வாரணாசி படம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜமெளலி கூறியதாவது, வாரணாசி படத்தில் புராண காலத்தில் நடந்த சம்பவங்கள் அதுசார்ந்த கருத்துக்கள் காட்சிகள் அதிகமாக உள்ளன.
புராண காலத்தின் பயண கருத்துக்கள் மற்றும் தெய்வீகம் கலந்த கலவையான காட்சிகள் இந்த படத்தில் முழுமையாக காணப்படும். சுமார் 25 நிமிடங்கள் புராணப் பகுதிகளாக இந்த படத்தில் முழுமையாக இருக்கும். வாரணாசி படத்தில் ஃபர்ஸ்ட் லுக் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதேபோல மொத்த படமும் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ளும்.
வாரணாசி படத்தில் மகேஷ்பாபு ருத்ரா என்ற வேடத்திலும் பிரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும் நடித்துள்ளனர். மலையாள நடிகர் பிருத்விராஜ் கும்பா என்ற வில்லன் வேடத்திலும் நடிக்கிறார் என்கிற முக்கிய தகவல்களை இயக்குனர் ராஜமௌலி தெரிவித்திருக்கிறார். நிச்சயமாக இந்திய சினிமா வரலாற்றில் வாரணாசி படம் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூறத் துவங்கியுள்ளனர்.





