- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டரை மணி நேரம் விஜய் ரியாக்‌ஷனே கொடுக்கல... அங்க போய் கத சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.. மனம்...

இரண்டரை மணி நேரம் விஜய் ரியாக்‌ஷனே கொடுக்கல… அங்க போய் கத சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.. மனம் திறந்த திருமலை பட இயக்குநர்

- Advertisement -

கோலிவுட்டின் டாப் ஹீரோ விஜய். அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சும் ஆரம்பித்திருக்கிறது. அந்த அளவுக்கு அவரின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் தாக்கத்தை செலுத்துகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்த்தில் அடுத்து நடிக்கவிருக்கும் படத்துக்கு 175 கோடி ரூபாய்வரை சம்பளமாக கொடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற பெயரை பெற்றுவிடுவார்.

அவருக்கு இப்படி மவுசு ஏறுவதற்கு காரணம் அவர் கமர்ஷியல் ஹீரோவாக மாறி இறங்கி அடித்ததுதான்.கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த வரிசை முதன்முறையாக கமர்ஷியல் ஹீரோவாக மாறியது திருமலை படத்தில். கடந்த ஆம் ஆண்டு விஜய், ஜோதிகா, ரகுவரன் உள்ளிட்டோர் நடிபில் வெளியான அப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்திலிருந்துதான் விஜய்க்குள் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ இருக்கிறார் என்பதை கோலிவுட் இயக்குநர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி கதைகள் எழுத ஆரம்பித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ரமணா சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமலை படம் உருவானது பற்றி பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “திருமலை படம் விஜய்க்காக நான் எழுதியதில்லை. தெலுங்கில் பிரபாஸை வைத்து எடுக்கத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் காலம் என்னை விஜய்யிடம் கொண்டு போய் நிறுத்தியது.

ராதாமோகன் மூலமாகத்தான் விஜய்யிடம் திருமலை கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் சின்ன வயதிலிருந்தே என்னுடைய பேச்சுக்கு அடுத்தவர் ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டும் என நினைப்பவன். நன்றாக இருக்கு அல்லது நன்றாக இல்லை என சொல்லிவிட வேண்டும் என பிறரிடம் எதிர்பார்ப்பேன். ஆனால் எதுவுமே ரியாக்ட் கிடைக்காத இடம் என்றால் அது விஜய்யிடம் மட்டும்தான்.

- Advertisement -

கதையின் முதல் பாதியை சொல்லி முடித்துவிட்டேன். முடித்தது வெளியே போக வேண்டும் என்றேன். அவர் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் சிகரெட் பிடிக்க வேண்டுமா என கேட்டுவிட்டு அனுப்பினார். உள்ளே வந்தது டீ குடிங்க என சொன்னார். பிறகு இரண்டாம் பாதியை சொன்னேன். இரண்டாம் பாதிக்கும் எந்த ரியாக்‌ஷனும் காண்பிக்காமல் இருந்தார். முழு கதையையும் சொல்லி முடித்துவிட்டேன். ஆனால் அவரோ நன்றாக இருக்கு நன்றாக இல்லை என ஏதேனும் ஒன்று சொல்ல வேண்டும். அவர் எதையுமே சொல்லாமல் அவருடைய அப்பாவுக்கு ஃபோன் செய்து பேசிவிட்டு என்னிடம் நீங்கள் நாளை சாலிகிராமம் சென்று அப்பாவிடம் கதை சொல்லுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

நான் வெளியே வந்து ராதாமோகனுக்கு ஃபோன் செய்து, ‘டேய் அவர் ஒன்னுமே சொல்லாம அப்பாட்ட கதை சொல்லிடுங்கனு சொல்லிட்டு போய்ட்டாரு டா’ என்றேன். அதற்கு அவனோ பிறகு என்ன ரமணா நீதான் இயக்குநர் என்று ஃபிக்ஸ் செய்துவிட்டார். அதனால் தான் அவர் அப்பாவிடம் உன்னை அனுப்பியிருக்கிறார் என்றான். அப்போதுதான் புரிந்தது அவர் என்னை இயக்குநர் என்று ஃபிக்ஸ் செய்துவிட்டுதான் தனது தந்தையிடம் பேசியிருக்கிறார் என்று. அவர் இந்த அளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் அவருடைய நாக்குதான். ஒரு விஷயத்தை சொன்னால் செய்துவிடுவார்” என்றா.ர்

- Advertisement -

சற்று முன்