கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே டைரக்ட் செய்த படம் காந்தாரா. இந்த படம் ரூ. 15 கோடி பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவான நிலையில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்த நிலையில் ரூ. 400 கோடி வசூலை அள்ளியது.
இதையடுத்து தற்போது காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி உள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி மீண்டும் டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜெயராம் மற்றும் ருக்மணி வசந்த் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 2ம் தேதி வெளியான இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து வசூலை அள்ளி வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற காந்தாரா, காந்தாரா சாப்டர் 1 படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஒரு விவசாயிக்கும் வனத்துறை அதிகரிக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது.
அதை நான் ரெண்டு பேருக்கும் இடையிலான சண்டையாக மட்டும் பார்க்கவில்லை. அதை இயற்கைக்கும் மனித தேவைகளுக்கும் இடையிலான மோதலாக பார்த்தேன். காந்தாரா கதையின் விதை அந்த யோசனையில் இருந்துதான் விதைக்கப்பட்டது. விவசாயத்தைச் சுற்றி நமது கலாச்சாரம் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை பற்றி நான் சிந்திக்க தொடங்கினேன்.
காந்தாரா படத்தில் எல்லோரும் கிளைமாக்ஸ் பற்றி பேசுகிறார்கள். அந்த காட்சிகளை நான் கற்பனை செய்து பார்த்தேன். எனக்கு பின்னால் ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்து அந்த காட்சிகளை எழுத வைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன். படைப்பு சாமானியர்கள் கூட புரிந்து கொள்ளும் விதமாக எளிதாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அது பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் அனைவரையும் சென்றடையும். காந்தாரா மீதான எனது நம்பிக்கை மீண்டும் ஒருமுறை உண்மையாகி விட்டது என்று படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ரிஷப் ஷெட்டி காந்தாரா படம் போலவே காந்தாரா சாப்டர் 1 படத்திலும் வரும் சில காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக கூறுகின்றனர்.





