- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் 90 நாட்கள், விஜயகாந்த் ரம்யா கிருஷ்ணன் குறித்த விஷயங்களை பகிர்ந்த இயக்குனர்!

கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் 90 நாட்கள், விஜயகாந்த் ரம்யா கிருஷ்ணன் குறித்த விஷயங்களை பகிர்ந்த இயக்குனர்!

- Advertisement -

கடந்த 1991ம் ஆண்டில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 100வது படம் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்துக்கு மனைவியாக ரூபிணி நடித்திருந்தார். சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் எம்என் நம்பியார் மன்சூர் அலிகான் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை இயக்குனர் ஆர்கே செல்வணி டைரக்ட் செய்திருந்தார். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

வழக்கமாக ரஜினி கமல் பிரபு என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வகையில் அவர்களது 100வது படம் தோல்வி படங்களாக இருந்துள்ளது. குறிப்பாக ரஜினி நடித்த 100வது படம் ஸ்ரீ ராகவேந்திரா, கமல் நடித்த ராஜபார்வை பிரபு நடித்த ராஜகுமாரன் என பல ஹீரோக்களின் 100வது படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. ஆனால் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் மாஸ் ஹிட் படமாக அமைந்தது.

- Advertisement -

இப்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 34 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. கேப்டன் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படம் குறித்த சுவாரசியமான தகவல்களை படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆர்கே செல்வமணி கூறியதாவது,
கேப்டன் பிரபாகரன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளில், வனப்பகுதிகளில்தான் படமாக்கப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் போன்ற முன்னணி நடிகைக்கு கூட பிரத்யேகமாக கேரவன் வசதி இல்லை. அப்போதெல்லாம் கேரவன் என்பதே கிடையாது.

- Advertisement -

அதனால் காட்டில் ஒதுக்குப்புறமான இடங்களில் உடை மாற்ற வேண்டிய சூழலில் இந்த படத்தில் நடித்தார். நடிகர்கள் முதல் உதவியாளர்கள் வரை அனைவரும் சம்பளத்தை விட படத்தின் கலை மதிப்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். விஜயகாந்த் ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் 90 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து சிரமங்களை பொருட்படுத்தாமல் உழைத்தனர்.

இன்றைய சினிமா உலகத்தில் இதுபோன்ற பட்ஜெட்டில் படங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும்பாலான தொகை நடிகர்கள் மற்றும் இயக்குனர் சம்பளத்துக்கு செலவழிக்கப்படுகிறது. கலை மீது உள்ள காதலால் மட்டுமே கேப்டன் பிரபாகரன் படத்தில் இது சாத்தியமானது என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்