- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்தன கடத்தல் வீரப்பன் உயிருடன் பிடிபட்டு இருந்தால் பல பேர் சிக்கியிருப்பார்கள் - வீரப்பனை நேரில்...

சந்தன கடத்தல் வீரப்பன் உயிருடன் பிடிபட்டு இருந்தால் பல பேர் சிக்கியிருப்பார்கள் – வீரப்பனை நேரில் சந்தித்த இயக்குனர் ஆர்கே செல்வமணி கிளப்பிய புயல்!

- Advertisement -

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இது விஜயகாந்தின் 100வது படமாகும். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தில் சரத்குமார் ரூபிணி ரம்யா கிருஷ்ணன் லிவிங்ஸ்டன் மன்சூர் அலிகான் காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வருகிற 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனை மிகவும் கொடூரமான வில்லனாக சித்தரித்து இருந்ததாகவும் அவரைப் பற்றிய தவறான காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் அதனால் இந்த படத்தை மறு வெளியீடு செய்யக்கூடாது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி இது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படம் குறித்து ஆர்கே செல்வமணி கூறியதாவது, கேப்டன் பிரபாகரன் படத்திற்காக அப்போது நான் வீரப்பனை நேரடியாக சந்தித்து பேசினேன்.

அவரிடம் இருந்த கூர்நோக்கும் திறன் என்னை வியக்க வைத்தது. தூரத்தில் மனிதர்கள் நடமாட்டம் இருந்தால், பறவை விலங்குகளின் நடவடிக்கை மூலமாக அதை அறிந்து கொள்வார். சுய ஒழுக்கத்தில் உச்சமாக இருந்தார். காவல் தெய்வமாக கிராமத்து மக்களை பாதுகாத்தார். தனி ஆட்களாக இருந்தாலும் கிராமத்துப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களை வீரப்பன் தண்டித்துள்ளார்.

வீரப்பன் சுமார் 30 ஆயிரம் டன் சந்தன மரங்களை வெட்டியுள்ளார். இதெல்லாம் எங்கே போனது? வெளியே இருப்பவரின் வலதுகரமாகவே வீரப்பன் செயல்பட்டுள்ளார். அவரை இயக்கிய மூளை வெளியே தான் இருந்துள்ளது. எந்த பெண்ணையும் வீரப்பன் தொட்டது கிடையாது. கெட்டவனாக நினைத்திருக்கும் வீரப்பனின் நல்ல குணத்தை வெளிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தை நான் பார்த்து பார்த்து வடிவமைத்தேன்.

வீரப்பன் உயிருடன் பிடிபட்டிருந்தால் பல குற்றவாளிகள் மாட்டியிருப்பார்கள். அவரை உயிருடன் பிடித்திருக்க முடியாது என்ற அடிப்படையில் தான் படத்தில் காட்சிகள் வைத்தேன். அதுதான் உண்மையிலும் நடந்தது என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். வீரப்பனை ஆர்கே செல்வமணி நேரில் சந்தித்தாக கூறியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்