- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தில் பேசிய டயலாக்கை நிஜத்திலும் பின்பற்றுகிறார், அரசியலில் நான் சொன்னதை அவர் கேட்கவில்லை -...

விஜய் படத்தில் பேசிய டயலாக்கை நிஜத்திலும் பின்பற்றுகிறார், அரசியலில் நான் சொன்னதை அவர் கேட்கவில்லை – வருத்தப்பட்ட எஸ்ஏ சந்திரசகேர்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரண நடிகராக அறிமுகமான அவர், பிறகு படிப்படியாக வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் அமோக வரவேற்பை அன்பை பெற்ற அவர், இப்போது தமிழ் சினிமாவில் நெம்பர் 1 நடிகராக உச்சத்தில் இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் அவர்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் விஜய் நடித்த சில படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், விமர்சன ரீதியாக விமர்சிக்கப்பட்ட அந்த படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டத்தை கொடுக்கவில்லை. விஜய் படத்தை தயாரிப்பதும் விஜய் படத்தை இயக்குவதும் தமிழ் சினிமாவில் பெரிய இமேஜை தரும் அளவுக்கு விஜய் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.

- Advertisement -

இதுவரை 68 படங்களில் நடித்துள்ள விஜய், இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவராக முழுவீச்சில் அரசியல் களத்தில் செயல்பட உள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்களும் கூறத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் வெளிப்படையான சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர் விஜய் குறித்து பேசியதாவது, விஜய் அரசியலுக்கு வந்தது ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. அதுவும் இப்படி சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வருவது யோசனையாக இருந்தது.

- Advertisement -

சினிமாவில் இப்படி ஒரு இடத்தை பிடிக்க அவர் எவ்வளவு கஷ்டபட்டார், கடவுள் இப்படி ஒரு உயரத்தில் கொண்டு வந்து வெச்சுட்டார். இதை விட்டுட்டு அரசியலுக்கு வருவதா, அரசியலுக்கு வரணும். கொஞ்ச நாள் கழிச்சு வரலாம்ன்னு என்று நான் நெனைச்சேன். பவுண்டேஷன் ஸ்ட்ராங் பண்ணீட்டு நேரடியாக இப்ப வேணாம். அப்புறம் வரலாம். அப்படி வந்தா நல்லா இருக்குமுன்னு நான் சொன்னேன்.

ஆனால் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு ஒரு படத்தில் வசனம் பேசுவார். இது சினிமா டயலாக், ஆனால் அதை தான் நிஜ வாழ்க்கையிலும் விஜய் பின்பற்றுகிறார். உண்மை அதுதான். ஏதாவது டிசைட் பண்ணிவிட்டால் அவ்வளவுதான். ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து மாற மாட்டார். நிச்சயம் ஜெயிப்பார் என்று, எஸ்ஏ சந்திரசேகர் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்