- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று கேப்டனின் 75வது பிறந்த நாள், கருப்பு நிலா ஷூட்டிங்கில் விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்...

இன்று கேப்டனின் 75வது பிறந்த நாள், கருப்பு நிலா ஷூட்டிங்கில் விஜயகாந்த் செய்த தரமான சம்பவம் – இயக்குனரிடம் கோபப்பட்ட புரட்சிக் கலைஞர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல இயக்குனர்களை அறிமுகம் செய்தவர். குறிப்பாக திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அதிகமாக அளித்தவர் தமிழ் சினிமாவில் கேப்டன் மட்டும்தான்.

நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவராகவும் விஜயகாந்த் சிறப்பாக செயல்பட்டார். மலேசியா சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலம் கிடைத்த வருவாயில் பல கோடி ரூபாய் இருந்த நடிகர் சங்க கடனையும் அடைத்தவர்.

- Advertisement -

மேலும் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி தமிழக அரசியல் களத்தில் பெரிய வரவேற்பை பெற்றவர். சட்டசபை எதிர்கட்சி தலைவராக மிக குறுகிய காலத்தில் அமர்ந்தவர். இன்று அவரது 75வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது, நல்ல மனிதர் பண்பாளர் வீரம் மிக்கவர் மற்றும் கருணையும் மனித நேயமும் கொண்டவர் கேப்டன் என்றால் அது மிகையல்ல.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கருப்பு நிலா படத்தின் இயக்குனர் அரவிந்த் ராஜ் கூறியதாவது, கருப்பு நிலா படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதில் விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடுவது போல் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட இருந்தது. அப்போது ஆதரவற்றோருக்கு உதவுகிற மாதிரி சீன் எடுக்கலாம் என்று நான் சொன்னேன்.

- Advertisement -

என்னது உதவி செய்யற மாதிரி எடுக்கப் போறீங்களான்னு கேப்டனுக்கு சட்டுன்னு கோபம் வந்துடுச்சு. உதவி செய்யற மாதிரி இல்லை. நான் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று உண்மையாக உதவி செய்றதையே எடுப்போம்ன்னு சொல்லிட்டார்.

அதற்காக சைக்கிள் ரிக்‌ஷா தையல் மிஷின் கண்ணாடி சீலிங் பேன் கட்டில் வாக்கிங் ஸ்டிக் எல்லாமே வாங்கீட்டு போய் அவங்களுக்கு கொடுத்து கேப்டன் உதவி செஞ்சார். அப்புறம் அங்க அந்த பாடல் காட்சியை ஷூட் செய்தோம். அதுதான் கேப்டன். சினிமாவுக்காக பண்ணாமல் உண்மையாகவே உதவும் மனம் கொண்டவர் என்று இயக்குனர் அரவிந்த் ராஜ் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்