- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன்? - உண்மையை போட்டுடைத்த அமர்க்களம் பட...

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன்? – உண்மையை போட்டுடைத்த அமர்க்களம் பட இயக்குனர்!

- Advertisement -

இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான படம் அமர்க்களம். இந்த படத்தில் அஜீத்குமார் ஷாலினி ரகுவரன் நாசர் அம்பிகா தாமு வையாபுரி ரமேஷ் கண்ணா பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போதுதான் அஜீத் ஷாலினி இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

நேற்று 24ம் தேதி அஜீத்குமார் – ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4கே தொழில்நுட்பத்தில் அமர்க்களம் படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையில் அஜீத்குமார் நடித்த படங்களை இயக்கிய இயக்குனர் சரண் ஒரு நேர்காணலில் அஜீத்குமார் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

அதில் அமர்க்களம் படத்தை இயக்கிய இயக்குனர் சரண் கூறியதாவது, அஜீத் குமாரை பொறுத்தவரை அவர் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாக மட்டுமே பார்க்காமல் அவர்களை மிகவும் மதிக்க கூடியவர். அமர்க்களம் படம் வெளியான அன்று இரவே சுமார் 25,000க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. அந்த அளவுக்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு ரசிகர்களிடம் இருந்தது.

மன்றங்கள் பெருகிய போது அவற்றுக்குள் தேவையற்ற பதவி சண்டைகளும் அரசியல் மோதல்களும் உருவாவதை அஜீத்குமார் கவனித்தார். மன்ற பதவிகளுக்காக ரசிகர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்வதும் சண்டையிட்டுக் கொள்வதும் அஜீத் குமாருக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. ரசிகர்கள் அவர்களுக்குள் மோதிக் கொள்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை.

- Advertisement -

இதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். ரசிகர்கள் தங்களது குடும்பம் வேலை மற்றும் எதிர்காலத்தை கவனிக்க வேண்டும் என்பதே அஜீத்குமாரின் விருப்பமாக இருந்தது. ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்குள் எந்த மோதலும் இருக்கக் கூடாது என்று சொல்லித்தான் அவர் தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்தார்.

அவர் எப்போதும், நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். என்னுடைய படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள் என்று தான் சொல்வார். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் எப்போதுமே பேச மாட்டார் என்று இயக்குனர் சரண் கூறியிருக்கிறார். நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் மீது கொண்ட அக்கறையால் தான் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்கிற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்