- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியலுக்கு போய்விட்டால் நடிக்க வருவாரா, மாட்டாரா? - இயக்குனர் சசிக்குமார் இப்படி ஆணித்தரமாக...

நடிகர் விஜய் அரசியலுக்கு போய்விட்டால் நடிக்க வருவாரா, மாட்டாரா? – இயக்குனர் சசிக்குமார் இப்படி ஆணித்தரமாக பேசியிருக்கிறாரே? – ஆச்சரியத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் இப்போது அவர் தி கோட்படத்தில் நடித்து அந்த படம் கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தி கோட் படம் இதுவரை 355 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று ஏற்கனவே அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசின் இயக்கத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி தனது கட்சியின் கொடியை பனையூரில் அறிமுகப்படுத்தி வைத்தார். கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றினார். மேலும் தனது கட்சி பாடலையும் நடிகர் விஜய் வெளியிட்டார்.

- Advertisement -

வருகிற 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஆனால் இன்னும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்த மாநாடு தள்ளிப் போகும் வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. போலீசார் தரப்பில் பலவிதமான நெருக்கடிகள், தரப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 69வது படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன், பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ, நடிகர் மோகன்லால் ஆகியோர் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி உள்ளது.

- Advertisement -

விஜய் அரசியலுக்கு வருவது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தாலும் விஜய் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு, இனி அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை, வருத்தத்தை தந்திருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா துறை சார்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் விஜய் சினிமாவில் நடிப்பதை தொடர வேண்டும் என்கின்றனர்.

நந்தன் என்ற படத்தில் நடித்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் அந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் பங்கேற்றார். அப்போது சசிகுமார் பேசுகையில், விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார். அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியலில் இருந்தாலும் சினிமாவில் அவர் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு போனாலும் மீண்டும் நடிக்க வருவார். அரசியலில் இருந்தாலும் அவர் நடிப்பை கைவிடமாட்டார் என்று சசிகுமார் கூறியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்