- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி - சீமான் சந்திப்பில் பேசியது என்ன? வருகிற சட்டசபை தேர்தலில் அப்படி ஒரு மாற்றத்துக்கு...

ரஜினி – சீமான் சந்திப்பில் பேசியது என்ன? வருகிற சட்டசபை தேர்தலில் அப்படி ஒரு மாற்றத்துக்கு வாய்ப்பிருக்கிறதா? – ரஜினி இந்த முறை வாய்ஸ் தருவாரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் வீட்டில் இன்று காலை சந்தித்திருக்கிறார் நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேட்டையன் படம் குறித்து சீமான் பாராட்டிப் பேசியதால் இந்த சந்திப்பு ரஜினியே, சீமானுக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.

இந்த சந்திப்பில் நிறைய அரசியல் நிலவரங்கள் குறித்து ரஜினியும்,சீமானும் பேசியிருக்கின்றனர். அதிமுக, திமுக கட்சிகளின் சட்டசபை தேர்தல் வியூகங்கள், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம், அவரது கட்சி கொள்கை கோட்பாடுகள், அரசியல் மாநாட்டில் திரண்ட மக்கள் கூட்டம், அவரது 48 நிமிட பேச்சு உள்ளிட்டவை குறித்து இருவருமே கலந்து தீவிரமாக பேசியிருக்கின்றனர்.

- Advertisement -

நடிகர் ரஜினியை பொருத்தவரை, தமிழ் சினிமாவில் போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என்று விமர்சிக்கும் அளவுக்கு பரபரப்பு ஏற்பட்டதும், காக்கா கழுகு கதையால் விஜய், ரஜினி ரசிகர்களும் இணையத்தில் மோதிக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன.

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான், நான் எப்போதுமே மக்களின் கட்டளைகளை நிறைவேற்றுகிற தளபதிதான், தளபதியாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன் என விஜய் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே போல் விஜய், நான் பார்த்து வளர்ந்த பையன். அவரை என் போட்டியாக கருதினால் அது அநாகரிகம் என்றும் ரஜினியும் லால் சலாம் விழாவில் வெளிப்படையாக பேசினார்.

- Advertisement -

ஆனால் இன்று ரஜினியை சந்தித்த சீமான், வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் பெரிய அளவில் வெற்றி பெற்றால் அது பலவிதங்களில் உங்களை விமர்சிக்க காரணமாகி விடும். ஏனெனில் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதா வேண்டாமா என நீங்கள் குழம்பிய நிலையில், விஜய் ஒரே முடிவாக வந்தது மட்டுமின்றி முதல்வர் நாற்காலியையும் குறி வைக்கிறார் என்று பல விஷயங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

அதனால் வருகிற சட்டசபை தேர்தல் சீமானுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நாம் தமிழர் கட்சி சார்ந்த பலர், இப்போது விஜய் கட்சிக்கு தாவி வருவதால் ரஜினி போன்றவர்களின் ஆதரவு தேர்தல் நேரத்தில் மிக முக்கியம் என கருதியே இந்த சந்திப்பை சீமான் நடத்தியதாகவும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. விஜயை எதிர்த்து, சீமானுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் தருவாரா என்பது 2026 சட்டசபை தேர்தல் நேரத்தில் தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்