- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் ரூமுக்குள்ள டைரக்டர்ஸ் வரலாம்; ஆனா அவங்க வரக்கூடாது, இசைஞானி இளையராஜா இப்படி ஒரு கண்டிஷன்...

என் ரூமுக்குள்ள டைரக்டர்ஸ் வரலாம்; ஆனா அவங்க வரக்கூடாது, இசைஞானி இளையராஜா இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்காரா? – அவரே சொன்ன விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக இசை சக்கரவர்த்தியாக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் உருவான அன்னக்கிளி படத்தில் சிவக்குமார், சுஜாதா நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் இளையராஜா.

அன்று முதல் இன்று வரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. கடந்த 1980களில் இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் வெற்றிதான் என்று சொல்லும் அளவுக்கு இசையால் ரசிகர்களை தன்வசம் கட்டிப் போட்ட பெருமை இவருக்கு மட்டுமே உள்ளது.

இசையில் தன்னிகரில்லாத ஒரு ஞானியாக கொண்டாடப்படும் இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கிக்கொள்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதுவும் அவர் பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவது, தனது அபிப்ராயங்களை சொல்வது பல நேரங்களில் அவரை பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்து விடுகிறது.

சமீபகாலமாக புதிய படங்களில், இளையராஜா இசையை பயன்படுத்தி பாடல்கள் வருகின்றன. தன்னுடைய அனுமதி பெறாமல் இப்படி பாடல்களை பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி வருகிறார். கூலி படத்தில் வெளியான டீசர் பாடலில் தன் இசையை பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை கிளப்பியவர் இளையராஜா.

சமீபத்தில் விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் கர்ப்ப கிரகத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்த இளையராஜா உடனடியாக வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் கோவில் விதிமுறைப்படி அர்த்த மண்டபத்துக்குள் மடாதிபதிகள், அர்ச்சர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதியில்லை என்று விளக்கமும் தரப்பட்டது.

இந்நிலையில் இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், எந்த பாடல்களுக்குமே நான் கம்போஸ் செய்ய 5 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது இல்லை. சிச்சுவேஷன் சொன்ன உடனே பாட ஆரம்பிச்சுடுவேன். என்னுடைய ரூமுக்குள் டைரக்டர் மட்டும்தான் இருப்பார். புரடியூசருக்கு அனுமதி கிடையாது. பணம் கொடுக்க மட்டும்தான் புரடியூசர் வரவேண்டும். வரக்கூடாது என்று நான் தடை விதிக்கவில்லை. அவர்களால் வர முடியவில்லை. அத்தனை புரடியூசர்ஸ் வெளியில் காத்திருப்பார்கள், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்