- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு படம் எல்லாம் இதெல்லாம் இருக்கணும், அந்த மாதிரி படங்களை தான் நான் கொடுக்க முயற்சிக்கிறேன்...

ஒரு படம் எல்லாம் இதெல்லாம் இருக்கணும், அந்த மாதிரி படங்களை தான் நான் கொடுக்க முயற்சிக்கிறேன் – இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!

- Advertisement -

ஜெண்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கர். முதல் படத்திலேயே கல்வி வியாபாரத்தை மையப்படுத்திய கதையை தந்திருந்தார். இதில் அர்ஜூன் மதுபாலா கவுண்டமணி செந்தில் மனோரமா நம்பியார் வினீத் சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து காதலன் முதல்வன் இந்தியன் அந்நியன் சிவாஜி எந்திரன் பாய்ஸ் நண்பன் போன்ற பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஷங்கர் 30 ஆண்டுகளில் கேம் சேஞ்சர் படம் வரை 15 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். ஆனால் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் அவரது பெயர் சொல்லும் படங்கள்தான்.

ஆனால் சமீபமாக இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பின்றி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகின்றன. குறிப்பாக இந்தியன் 2 படம், ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களில் சிக்கியது. அதே போல் கேம் சேஞ்சர் படமும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இந்த சூழலில் அடுத்து மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை 3 பாகங்களாக படமாக எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்தியன் 3 படத்துக்கு பிறகு அந்த படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்க உள்ளது. கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நடிகர்கள், நடிகைகள் குறித்தும் ஷங்கர் தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறார்.

நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, எல்லாவிதமான படங்களையும் நான் பார்ப்பேன். எல்லாவிதமான படங்களும் எனக்கு பிடிக்கும். நான் டீன் ஏஜ் வயதில் படங்களை பார்த்த அந்த காலகட்டத்தில், என்னவெல்லாம் எதிர்பார்ப்பேன். ஒரு படத்தில் எல்லாம் இருக்கணும். நியாயமான ஒரு கதை இருக்கணும். நல்ல டயலாக் இருக்கணும். ஒரு டிவிஸ்ட் இருக்கணும். நல்ல கிளைமாக்ஸ் இருக்கணும்.

நல்ல பாட்டு இருக்கணும். நல்லா பைட்டு இருக்கணும். காமெடி இருக்கணும். நல்ல செக்ஸ் இருக்கணும். நல்ல லொக்கேஷன் இருக்கணும். இப்படி எல்லாமே இருக்கணும்ங்கற ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குது. அதனால் நான் எப்படி ஒரு படத்தை பார்க்க விரும்பறனோ, அந்த மாதிரி நான் கொடுக்க முயற்சி செய்கிறேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருக்கிறார்.

சற்று முன்