- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வாரம் ஷூட்டிங் இல்லேன்னா நான் இப்படிதான் அந்த நாட்களை கழிப்பேன் - நடிகர் சிவகார்த்திகேயன்...

ஒரு வாரம் ஷூட்டிங் இல்லேன்னா நான் இப்படிதான் அந்த நாட்களை கழிப்பேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டில் வெளியான படங்களில் அமரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயனின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதர்வா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் பல மாதங்களாக இயக்கி வருகிறார். ஷாருக்கான் நடித்துள்ள சிக்கந்தர் படத்தை முடித்துவிட்டு தான் அவர், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் மீதி காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளார்.

இந்நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் தனது 24வது படத்திலும் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார். ஆனால் 4 மாதங்களுக்கு பிறகுதான் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளது. அதனால் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

பொதுவாக மார்க்கெட் உள்ள பெரிய நடிகர்களுக்கு எப்போதுமே பிஸியாக தான் இருப்பார்கள். அடுத்தடுத்த லைன் அப்களில் இப்போது சிவகார்த்திகேயனும் பிஸியாக இருந்து வருகிறார். மற்ற நடிகர்கள் ஓய்வு நாட்களை வெளிநாடுகளில் கழிப்பார்கள். குடும்பத்துடன் லண்டன், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து என டூர் செல்வார்கள்.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு டூர் செல்வதை விட ஒரு வாரம் வீட்டில் நிம்மதியாக இருப்பதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். வெளிநாடு போனாலும் அங்கே எங்கே நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னு தேடி சாப்பிட்டுட்டு, நல்லா தூங்குவேன். இல்லேன்னா பிரண்ட்ஸ் கூட கிரிக்கெட் விளையாட போவேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்