- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்துக்கு வந்த திடீர் சிக்கல் - இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் ஷங்கர்...

இந்தியன் 2 படத்துக்கு வந்த திடீர் சிக்கல் – இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் ஷங்கர் கனவு நிறைவேறுமா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி உள்ளது. இயக்குனர் ஷங்கரின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்தியன் படத்தை போலவே இந்தியன் 2 படமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், 28 ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் லஞ்சம் வாங்குபவர்களை, ஊழல் செய்பவர்களை கத்தியால் குத்திக் கொலை செய்யும் கேரக்டரில், இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸ்சில் தவறு செய்த தனது மகனையே குத்திக் கொன்று விடும் நேர்மையான இந்தியனாக நடிகர் கமலஹாசன் படத்தில் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் மெகா ஹிட் படமாக ஷங்கருக்கும், கமலுக்கும் அமைந்தது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியன் 2 மற்றும் என்று இந்தியன் 3 படமும் தயாராக இருக்கிறது. இந்தியன் 2 வரும் ஜூன் 13ஆம் தேதியும், இந்தியன் 3 வரும் 2025 ஆம் ஆண்டிலும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு ஒரு வைப் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஆனால் இந்த முறை இந்தியன் 2 படத்துக்கு உண்டான எதிர்பார்ப்பும், படம் குறித்த பரபரப்பும் இல்லை.

எனவே இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை பிரமோவை கொண்டு வந்து விடலாம் என்று ஷங்கர் திட்டமிட்டார். ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக பிரபலம், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தால் நன்றாக இருக்கும், மேலும் அவர் கமலின் நெருங்கிய நண்பராகவும் வரலாம் என்று அவர் யோசிக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சிக்கு வருவதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் மே 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் தோல்விக்கு காரணம் லைகா நிறுவனம் மீது பழி போட்டதால், அந்த சம்பவத்துக்கு பிறகு ரஜினிக்கும், லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. அதனால் லைகா தயாரிப்பு படமான இந்தியன் 2 விழாவில் ரஜினி பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்