- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க தலய காணும்னு மண்டபத்தையே அடிச்சு நொறுக்கிட்டாங்க மதுரக்காரங்க... அதனாலதான் ரெட் படத்தை அப்படி எடுத்தேன்......

எங்க தலய காணும்னு மண்டபத்தையே அடிச்சு நொறுக்கிட்டாங்க மதுரக்காரங்க… அதனாலதான் ரெட் படத்தை அப்படி எடுத்தேன்… பிளாஷ்பேக்கை ஓப்பன் செய்த இயக்குனர் சிங்கம் புலி…

- Advertisement -

கோலிவுட் திரையுலகில் தனி சாம்ராஜ்யத்தை படைத்து உச்ச மார்க்கெட்டில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். அஜித்தின் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலைக் குவிக்க தவறியதில்லை. மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு வாரம் ஈட்டும் வசூலை அஜித்தின் திரைப்படங்கள் வெறும் மூன்றே நாட்களில் பெற்று விடும்.

 

- Advertisement -

அந்த அளவுக்கு அவருக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்று, தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக அஜித் விளங்குவதற்கு காரணம் அவர் முந்தைய காலங்களில் கொடுத்த பம்பர் ஹிட்டுகள்தான். காதல் மன்னன் திரைப்படத்தில் ஆரம்பித்து, அமர்க்களம், தீனா, வாலி என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் அவர் இடம் பிடித்தார்.

 

- Advertisement -

இதில் தீனா திரைப்படம் அவருக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்தது. இதேபோல் அட்டகாசம் திரைப்படம் தென்மாவட்டங்களில் அவர்களுக்கு ரசிகர்களை கொடுத்தது. இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய திரைப்படம் ரெட்.

 

மதுரையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது இங்கு பலருக்கும் தெரியும். ரெட் திரைப்படத்திற்கு முன்பாகவே அவருக்கென ஒரு கூட்டம் அங்கு இருந்தது. இந்த திரைப்படம் வந்த பிறகு அந்த கூட்டம் வலுவானது என்று கூறலாம். வில்லனை எதிர்த்து நல்லது செய்வதற்காக அடிதடியில் இறங்கும் ஒரு இளைஞர், பின்பு அவருக்குள் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் மாற்றம் என்பதை சுவாரஸ்யமாக கூறியிருந்தது ரெட் திரைப்படம்.

 

இந்த திரைப்படத்தை, இன்று காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சிங்கம்புலி தான் எடுத்திருந்தார். மாயாண்டி திரைப்படம் அவருக்கு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. அங்கிருந்து தனது நடிப்புக்கான பயணத்தை அவர் ஆரம்பித்தார். சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் சிங்கம்புலியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரெட் படத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை அவர் பகிர்ந்து உள்ளார். இது பற்றி அவர் பேசியிருப்பதாவது,

 

ரெட் படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக மதுரையில் ஒரு மண்டபத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். அஜித் சாரும் என்னுடன் வந்திருந்தார். பத்து நிமிடங்கள் மட்டும் இருந்துவிட்டு அவர் சென்று விட்டார். ஆனால் அவர் அங்கு வந்ததை தெரிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர். எங்கள் தலயைக் காணவில்லை என்று கூறி அவர்கள், மண்டபத்தை சூறையாடிவிட்டனர். இதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினோம். இதன் பிறகு சென்னை சென்றபோது அஜித் என்னை அழைத்து பேசினார். மதுரை மாநகரில் சூட்டிங் நடத்தப்பட்டால் சரியாக வருமா என்று கேட்டார். நானும் அங்கு வேண்டாம் என்று கூறிவிட்டு ஹைதராபாத்தில் செட் போடலாம் என்று தெரிவித்தேன். நான் மட்டும் அப்போது மறுத்திருந்தால் ரெட் திரைப்படமே நடந்திருக்காது என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்