நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழ் மலையாளம் இந்தி என இதுவரை 236 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு படம் சகலகலா வல்லவன். கடந்த 1972ம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் பாடும் ஹேப்பி நியூ இயர் இளமை இதோ இதோ பாடல்தான் இன்று வரை ஆங்கில புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு பலரது வாட்சப் ஸ்டேட்டஸ் ஆக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் கமல் பெயர் சொல்லும் முக்கிய கமர்ஷியல் படங்களில் முதலிடத்தில் இருப்பது சகலகலா வல்லவன் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் ஒய்ஜி மகேந்திரன் விகே ராமசாமி ரவீந்தர் தேங்காய் சீனிவாசன் மற்றும் அம்பிகா துளசி சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தனது தங்கை துளசியை கெடுத்த ரவீந்தரை பணக்காரனாக நடித்து ஏமாற்றி கமல் திருமணம் செய்து வைப்பதுதான் படத்தின் மையக்கதை.
மேலும் இந்த படத்தில் ரவீந்தரின் காதலியாக சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். அவருடன் கமல் நடனமாடும் நேத்து ராத்திரி யம்மா பாடல் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு பாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சகலகலா வல்லவன் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம்தான் இது. அந்த படப்பிடிப்பில் கேஷியர் பணியில் இருந்த நபர் எல்லோரையும் கலாய்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
அவரை எப்படியாவது வெறுப்பேற்ற வேண்டும் என்று நடிகர் கமலும் அவருடன் நடித்த ஒய்ஜி மகேந்திரனும் முடிவு செய்திருக்கின்றனர். அப்போது அவர்களிடம் வந்த நடிகை சில்க் ஸ்மிதா, கேஷியருக்கு நன்றி சொல்ல வேண்டும். நல்ல தமிழ் வார்த்தைகள் சொல்லிக் கொடுங்க என்று கேட்டிருக்கிறார். இதுதான் சமயம் என சில மோசமான கெட்ட வார்த்தைகளை கமல் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அதை கேட்டுக்கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவும் நேரடியாக கேஷியரிடம் சென்று அப்படியே அந்த வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு கேஷியர் பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவரும் சில்க் ஸ்மிதாவை கண்டபடி பேச ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு நடந்த விஷயங்களை கமலும் ஒய்ஜி மகேந்திரனும் விளக்கமாக சொல்லி கேஷியரையும் சில்க் ஸ்மிதாவையும் சகஜ நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.





