உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. தொடர்ந்து முறைமாமன் மேட்டுக்கடி அன்பே சிவம் அருணாசலம் வின்னர் போன்ற பல படங்களை கொடுத்து, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
நடிகை குஷ்புவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து படங்களை இயக்கிய சுந்தர் சி, படங்களில் நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அவர் இயக்கி நடித்த அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 படங்கள் பெரிய வெற்றியை பெற்றது.
இப்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். மேலும் அரண்மனை 5 படப்பிடிப்பை விரைவில் துவங்க இருக்கிறார். மேலும் 2013ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படம் வருகிற 12ம் தேதி பொங்கல் ரிலீஸாகிறது. 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த படம் தற்போது வெளியாவது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய குருநாதர் இயக்குனர் மணிவண்ணன் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, இயக்குனர் மணிவண்ணனுக்கு கிரிக்கெட் விளையாட ரொம்ப பிடிக்கும். எல்லோருடனும் சேர்ந்து விளையாட ஆசைப்படுவார். அப்படி ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினோம்.
அப்போது அவரிடம் ஒரு உதவி இயக்குனர் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார். அவர் பின்னாளில் பெரிய இயக்குனராக உருவானார். அவர்தான் ராசுமதுரவன். அவரை கிரிக்கெட் விளையாட அழைத்தபோது வர மறுத்துவிட்டார். நாம் டைரக்ஷன் செய்ய வந்திருக்கிறோம். இப்படி கிரிக்கெட் விளையாட டைரக்டர் அழைக்கிறாரே என்று தயங்கி நின்றார்.
வாப்பா கிரிக்கெட் விளையாடலாம் என்று மணிவணணன் அழைத்த போது, இல்லே சார் எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்று ராசு மதுரவன் கூறினார். அப்படின்னா டைரக்ஷன் மட்டும் உன்னோட குலத்தொழிலா, நீ பிறக்கும் போதே உங்கப்பா கத்துக்கொடுத்து அனுப்பிச்சிட்டாரா என்று மணிவண்ணன் கேட்டார். அது எனக்கு ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தது. நான் தயாரிப்பாளராக அதுதான் காரணம் என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.





