- Advertisement -
Homeபொழுதுபோக்குபிளாப் படங்களை கூட சூப்பர் படம் என பாராட்டும் நடிகர் சத்யராஜ், பின்னால இப்படி ஒரு...

பிளாப் படங்களை கூட சூப்பர் படம் என பாராட்டும் நடிகர் சத்யராஜ், பின்னால இப்படி ஒரு காரணம் இருக்குதா? உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் சத்யராஜ். துவக்கத்தில் வில்லனாக நடித்து, பிறகு நாயகனாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் அவரது கட்டப்பா கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு, இப்போது ரஜினியுடன் கூலி படத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுந்தர் சி, நடிகர் சத்யராஜூடன் நெருக்கமான நட்பு கொண்டவர். குரு சிஷ்யன் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுந்தர் சி, நடிகர் சத்யராஜ் குறித்த சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டார்.

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, தொழிலில் என் குருநாதர் இயக்குனர் மணிவண்ணன். ஆனால் வாழ்க்கையில் என்னுடைய குருநாதர் நடிகர் சத்யராஜ்தான். நான் அவரைதான் ஈயடிச்சான் காப்பியடிப்பேன். நான் மத்தவங்க கிட்ட பழகற விதத்தை கூட சத்யராஜ் கிட்ட இருந்துதான் ஜெராக்ஸ் எடுத்துட்டு இருப்பேன்.

ஒருமுறை ரிவ்யூ ஷோ பார்க்க 2 பேரும் போனோம். பயங்கர அறுவை படம். உட்காரவே முடியலை. படம் பார்த்துட்டு வெளியே வர்றோம். அந்த படத்தோட தயாரிப்பாளர், இயக்குனர் எல்லாம் வெளியே நிக்குறாங்க. அவங்க கைய பிடிச்சுட்டு சத்யராஜ், படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்றார். சூப்பர் படம்ன்னு அவங்க கிட்ட சந்தோஷமா சொல்றார்.

- Advertisement -

அப்புறம் கார்ல நானும் அவரும் போகும்போது. எப்படி சார், கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாம இந்த படத்தை நல்லா இருக்குதுன்னு சொல்றீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர், அடுத்த வாரம் அந்த படம் ரிலீஸாக போகுது. படம் ஆரம்பிக்கும்போது நம்மகிட்ட வந்து இப்படி ஒரு கதையை பண்றேன்னு சொன்னா நாம அதுபத்தி சரியான கருத்தை சொல்லலாம். ஆனா படத்தை எடுத்துட்டாங்க.

அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆனா முதல் ஷோ பார்த்தவுடனே அவங்களுக்கே ரிசல்ட் என்னன்னு தெரியப் போகுது. அதுக்குள்ள நாம ஒரு உண்மையை சொல்லி, நாம அவருக்கு பகை ஆகிடுவோம். அப்புறம், நாமதான் முதல்ல படம் பார்த்து நல்லா இல்லேன்னு சொன்னோம்ங்கற கெட்ட பேரும் நமக்கு வந்துடும். அதனால ஒரு வாரம் சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். அப்புறம், சத்யராஜூக்கு இந்த படம் புடிச்சது, இவங்களுக்குதான் புடிக்கலே. அவருக்கு புரிஞ்சது, இவங்களுக்கு புரியலேன்னு நம்மை பாராட்டுவாங்க, என்று சொன்னார் என்று பேசியிருக்கிறார் சுந்தர் சி.

- Advertisement -

சற்று முன்